29/2/24

எட்டிப்பார்க்கும் நிலவு

 மேகத்திற்கு மறைந்து எட்டிப்பார்க்கும் நிலவு

எட்டாக்கனியென அறிந்தும் - அதனை

தொட்டுப் பார்க்க எத்தனிக்கிறது உள்ளம்....

24/2/24

முகப்புத்தகத்தில்

 எப்போதும்போல் முகப்புத்தகத்தில் 

நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.

தள்ளத் தள்ள பதிவுகள் குவிந்து கொண்டே இருந்தன. 

 இருபாலர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன்

 கல்லூரிச் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தான்.

தள்ளிய விரல் உறைந்து நின்றது.

நினைவுகள் கல்லூரி காலத்திற்கு இழுத்துச் சென்றன. 

ஓர் இன்பச் சுற்றுலா நடந்திருக்கலாம் 

ஒரு குழு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்

வீட்டில் பிரேம் இட்டு மாட்டியிருக்கலாம்

அந்தக் கொடுப்பினையும் இல்லை.

இத்தனை வருடங்களாக ஒர் ஒளிப்படத்தை 

ஒளித்து வைத்து பார்க்க வேண்டியிருந்திருக்காது.


நாம் சந்திக்கும் பூங்கா

நீர்வாழ் தாவரங்கள் நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்
 
நம் அன்பில் மிதந்து பூக்களோ! பூத்துத் தரும்
 
நாம் வேண்டும் வண்ணம் பூக்களை விஞ்சும்
 
திரவியதோடு நடை பழகிக்கொண்டிருக்கும் தென்றல்.

'பிறருக்கு அனுமதியில்லை' இவ்வாசக பலகையை

பூங்காவே மாட்டிக்கொண்டது ஒருவரின்றி ஒருவர் 

வருவோமெனில் முதற்சொன்ன மூன்று சேவைகள் மூடப்படும்.

நீ சுவைத்துத்தரும் காய்கள் எனக்கு கனியாகும் 

இச்சேவை மாத்திரம் எனக்கு இங்கும் வெளியும் கிட்டும்.

நீ என்னிடமிருந்து பறிக்கப்பட்ட பின், இப்பூங்கா 

என்னிடம் வெறுமையை காட்டியது இப்போதோ 

வெறுப்பை காட்டுகிறது தாவரங்களா? புதர் மண்டிற்று.

பூக்களா? அவை பூப்பதேயில்லை தென்றலா?

உஷ்ணமேட்றி தகிக்கின்றது பூங்காவா? 

அது என்னை வதைக்கும் கூடமாகிப்போயிற்று.

 

23/2/24

மறைந்த நினைவுகளுடன்

 மறைந்த நினைவுகளுடன்

மறந்து சென்ற உன்னை

மரத்துப்போன நெஞ்சம்

மருந்தென எண்ணும்

அன்பின் முடிவு

அன்பின் வெளிபபாடே காதல்

காதலின் வெளிபாடே அன்பு

அன்பின் வெளிபாடே‌ மோதல்

மோதலின் வெளிபாடே காயம்

காயத்தின் வெளிபாடே கண்ணீர்

கண்ணீரின் வெளிபபாடே ஞாயம்

ஞாயத்தின் வெளிபாடே குரல்

குரலின் வெளிபாடே ஏக்கம்

ஏக்கத்தின் வெளிபாடே கோபம்

கோபத்தின் வெளிபாடே உண்மை

உண்மையின் வெளிபாடே நீதி

நீதியின் வெளிபாடே வெற்றி

வெற்றியின் வெளிபாடே தலைகனம்

தலைகனத்தின் வெளிபாடே ஆதிக்கம்

ஆதிக்கத்தின் வெளிபாடே அழிவு

அழிவின் வெளிபாடே முடிவு. 

20/2/24

கொரோனா

 வாழ்கையின் சீற்றத்தை கண்டோமடா !!!

கொரோனாவின் அச்சத்தில் வாழ்ந்தோமடா !!!

முககவசத்தை அணிந்து நடமாடினோம் !!!

கைக்கழுவி சுத்தத்தை நிலைநாட்டினோம் !!!

சமூக விலகல் ஒன்றை பின்பற்றுவோம் !!!

தடுப்பூசி போட்டு பாதுகாப்பாகிடுவோம் !!!

கடந்து போகும் என நம்பிடுவோம் !!!

மன உறுதியால் வென்றிடுவாம் !!!


18/2/24

இது தான் வாழ்க்கை

 'சாவி' இல்லாத 'பூட்டை'

மனிதன் உருவாக்குவதில்லை

'தீர்வு' இல்லாத 'பிரச்சனைகளை' 

கடவுளும் தருவதில்லை!

இது தான் வாழ்க்கை, 

இதை புரிந்துக்கொண்டால் 

வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்..


மூத்தவனாய் பிறந்தவன்

 முத்தமிட்டு மகிழ்ந்திடவே மூத்தவனாய் பிறந்தேனோ????

காலம் கடந்து போன பின்னும் கர்ணன் போல காப்பேனோ????

உன் முன்னேற்றம் கண்ட பின்பே மூச்சயர்ந்து போவேனோ????

உன் இன்னல் எல்லாம் தேர்ந்த‌ பின்பே இறைவனடி சேரவேனோ?????


உன் மீது கொண்ட காதல்

 உன் மீது கொண்ட காதல் கண்ணில் இருந்தால்

கண்ணீராய் துடைத்து இருப்பேன்

இதயத்தில் இருப்பதால் உயிர் விடுகிறேன்
       

உன்னை பார்த்த முதல் நாள்

 உன்னை பார்த்த முதல் நாள் என் மனதில் மாற்றம் ஒன்று கண்டேன்.

தினமும் ஆயிரம் கனவுகளுடன் என் நாட்கள் அழகாய் நகர,

நீ என் அருகில் இருந்தால் இந்த மாற்றமும் ஏற்றம் ஆகும்.

எப்போது திருமணம் எனும் மேடையில் என்னை அறங்கேற்றுவாய்

இன்று வரை உன் வரவை எண்ணி நிதமும் காத்திருக்கிறேன்.

அல்லிராணி

 ஆதவன் மறையும் முன்பு

ஆடையை அணிந்து கொண்டு

ஆசை ஆசையாக அல்லிராணியை

ஆறுத்திங்கள் கழித்து காணச் சென்றேன் - அங்கு

அல்லிராணி சிங்காரமாக சிகை

அலங்காரம் செய்து கொண்டிருப்பதாக செய்தியைக் கேட்டு

அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்

அல்லிராணி ஆடி அசைந்து வரும் வேளையில்-என்

அப்பா மகனே! 'ஆ' விற்கு சேவகம் செய்- என்று

ஆணைபிறப்பிக்கவே அழுதபடியே வீட்டிற்கு வந்துவிட்டேன்.


17/2/24

நிலை தடுமாறி நிற்கிறேன்

 அன்பினை அமுதாக்கி  தந்தவளே

உயிரையும் மெய்(உடல்)யினையும் தந்த

 உனக்கு உயிர் எழுத்திலும் சரி 

மெய் எழுத்திலும் சரி வர்ணிக்க 

வார்த்தை கிடைக்காததால் நிலை தடுமாறி

 நிற்கிறேன் இந்த வரிகளை முடிக்காமல்.

என்னிலும் நீ எண்ணிலும் நீ

ஒரு தொலைபேசி எண்ணை டயல் செய்து அழைக்க வேண்டியிருந்தது.

முதல் மூன்று எண்களை பார்த்தே டயல் செய்தேன்.

நான்காம் ஐந்தாம் ஆறாம் எண்களை விரல் தானாக டயல் செய்தது,

மூன்று எண்ணிற்கு மேல் நான் பார்க்கவே இல்லையே!

உணர்வு கொண்டு கவனித்தேன். என் விரல் டயல் செய்து கொண்டிருந்தது 

அவள் எண. தூக்கிவாரிப்போட்டது. இருநான்கு(8) ஆண்டுகளாய்

இவ்வெண்ணை நான் டயல் செய்ததே இல்லை

இன்னமும் என் விரல் நுனிகளில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்.
 

எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும்

 எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும் சிலமுறை

செடிகள் வாங்கி சிரத்தையோடு பராமரித்திருக்கிறேன்
 
ஓரிருமுறை பூக்கும் பின் காய்ந்து போகும்
 
இருந்தும் எனக்கு எந்த ரோஜாவிடமும் கோபமில்லை.

16/2/24

இயற்கை விவசாயம் கவிதை

இயற்கை விவசாயத்தைப் போற்றுவோம்...!
உலக படைப்பில் உன்னத படைப்பே இயற்கை விவசாயம்.....!
 ஏர்கலப்பையை பிடித்து நிலத்தை சமப்படுத்தி....!
முத்து முத்தாய் விதையை விதைத்து....!
பச்சை பச்சையாய் நெற்கதிர் முளைத்து...!
உலகின் பஞ்சத்தை போக்கும்....!
விவசாயத்தை நோசிப்போம்....!
உழவனின் உடலில் முத்து முத்தாய்.....!
வியர்வை சொட்ட சொட்ட....!
கட்டு கட்டாய் நெற்கதிரை.....!
அறுவடை செய்வோம்....!
ஆடி பட்டம் தேடி வர ஆசை ஆசையாய்....!
கரும்பை  போட்டு கட்டு கட்டாய் கட்டி குவிப்போம்....!
அனைத்து வகை காய்யையும் இயற்கையில் .....!
விளைவித்து ஊர் ஊராய் சென்று....!
இயற்கை காய்யென கூவி  கூவி விற்பனை செய்வோம்.....!
மழை மும்மாாி பொழிய....!
மக்கள் பஞ்சம் தீரா.....!
மண்ணின் மணம் மற.....!
புதிது புதிதாய் விவசாயத்தை செய்வோம்.....!
மழை தரும் இயற்கையை போற்றுவோம்.....!
மண் வளம் தரும் மண்புழுவை பாதுகாப்போம்.....!

இயற்கை விவசாயம் கவிதை

என் இதயம் நீதான்

 என் கண்னிரை துடைபதர்கு யாரும்  இல்லை

என் கவலைக்கு ஓய்வு இல்லை

என் காதல் அவலுக்கு புரியவில்லை

அதை மறக்க என்னாள் முடியவில்லை

அவள் இல்லாத உலகம் எனக்கு தேவையில்லை

என் இதையம் அவளால் காண வில்லை

அதை தேடி பார்க்க எனக்குவிருப்பம் இல்லை

என் என்றால் என் இதயம் நீதான் என்று மறகவில்லை


15/2/24

அம்மாவின் மடியில்

 உன் பஞ்சு மெத்தை கால்கள் 

தரையில் படுகையில் தரை

சிலிர்த்து போகிறது! அழகான 

கருவாக நீ என் வயிற்றில் 

உருவான போத என்னை 

ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்! 

நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ

விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!

முளைத்தெழும் விதைப் போல நீ 

வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........


விரல் கோர்க்கும் நேரம்

 உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடத்தை விட
 
நேசிக்கும் நிமிடமே இதமானது!

என் கண்ணீரை நீ துடைக்கும் நேரமும் 

உன் விரலை என் விரலோடு கோர்க்கும் நேரம் எப்போது.

உன்னையை பார்க்கும் போது

 உன்னையை பார்க்கும் போது நெல்மனி போல 

          மனதில் ஆசைகொட்டி வழிகிறது! 

நீ என்னை பார்க்காத தருணம் இதயம் 

           மரணத்தின் வாயிலை எட்டி விடுகிறது! 


12/2/24

என்றென்றும் நீயெனக்கு நண்பனே

நண்பன் என்ற ஒரு சொல்லே
உலக மக்களின் ஆதரவு-கீழே 
விழும் முன்னே தாங்கி பிடித்திடித்திடும் 
கரம் கொண்டான் நண்பனே

கோடையிலே நீராய் குளிர்ச்சியில் தீயாய்
தீபமாய் இருப்பான் நண்பன்-காலமது
புறந்தள்ளும் உலகமது உடைத்தெறியும் ஆதரவு 
கரமாய் அன்பு நண்பனே

பட்டியலில் சேர்க்கவில்லை இருந்தாலும் தெய்வமவன்
தோல்வியில் தன்னம்பிக்கை கொடுப்பான்-வெற்றியில்
மனநிறைவு அடைவான் இணைபிரியா சந்தோஷம்
உறவறியா அப்பாசம் நண்பனே

பூமியதுதூக்கி எறிந்தாலும் உன் மடியில்
விழவேத்தான் ஆசை கொள்வேன்-கர்ணன் 
வழி நடப்பேன் உனக்கென உயிர்கொடுப்பேன்
என்றென்றும் நீயெனக்கு நண்பனே