30/12/16
28/12/16
பூவின் இதழ் சிவப்பு!
காலையில் ஆயிரம்!!!
மலர்கள் மலர்ந்தாலும்...
உன் இதழ் புன்னகையே!!!
என் நினைவில் மலர்கின்றன!..
தினம் தினம்!!!..
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
2/12/16
வாழ்க்கை!
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
30/11/16
நிலவு பெண்ணானது!
யாரிடமும் சொல்லாமல்,
பூமியில் பெண்ணானது - நிலவு!
அவள் கண்விழித்து பார்த்தால்
பௌர்ணமி !
கண்களை சிமிட்டி பார்த்தால் !
வளர்பிறை !
நான் இப்பொழுது ஆகிறேன் !
உன்னால் தேய்பிறை !
நீ போதும் என்று சொல்லு !
ஒரு முறை !
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
15/11/16
கரையும் பனி!
உன்னை பார்த்தபின்பு
ஓவ்வொரு பூக்களின் கர்வமும்,
காணாமல் போகின்றன…
கீழே விழும் - பனித்துளியில் !
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
14/11/16
பகலில் தோன்றாத நிலவு!
நீ இரவில் மட்டுமே
உன் முகம் காட்டுகிறாய்!
இப்பொழுது புரிந்தது
ஏன் இரவில் மட்டும்
நிலவு வருவதென்று !
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
11/11/16
ஒற்றை கால் நடனம்!
ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
9/11/16
மேக முத்தங்கள்!
உன் உதட்டின் மேலே
மூச்சுக்காற்று பட்டதும்...
தூவுமோ...என்
இதழினிலே
சில முத்தங்கள் !!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
1/11/16
17/9/16
ஓவியம்!
இந்த ஓவியத்திற்கு எப்படி
என்னை பிடித்துப்போனதென்று
தெரியவில்லை ?
துரிகையாக நான்
உன்னுள் கலந்திட காத்திருக்கிறேன் !!