31/12/19

குண்டுகள் துளைக்காத கவசம் (கவிதை போட்டி)

love failure kavithai
வேறு மனம்
குண்டுகள் துளைக்காத
கவசம் கொண்டு
கட்டப்பட்ட மனம்  -இடிந்தது
கடுஞ் சொற்கள்
கேட்ட கணம் !
காக்க வேண்டும் -வேறு
கவசம் கொண்டு -இல்லை
கேட்க வேண்டும் எதையும்
கடந்து செல்லும் மனமொன்று
 -வி .ஆஷாபாரதி

Tamil Kavithai Competition


27/12/19

விவசாயி (உழவன்) - (கவிதை போட்டி)

vivasayam kavithaigal
உயிர் வாடிய காலம் சென்று!
பயிர் வாடி அழிகிறது இன்று !
அணைத் திறந்து பயிரிட்ட நீயோ,
வினை மறந்து பயணிப்பது ஏன்?
பொங்கல் வைத்து நன்றி கூறிய
நன்றி மறவா நல்லவனே!
உனக்கு நன்றிக் கூற வாய்ப்பிது!
உனக்கு வந்தனை செய்வதில் எனது சிறுப்பங்கு இக்கவிதை!
வாழ்க உழவும் உழவனும்!
வளர்க தமிழும் தமிழரும் !!
- நா ஈஸ்வரன்

இயற்கை தந்தன இனிமை - (கவிதை போட்டி)

natural tamil kavithai image

அந்தி சாயும்  நேரம்பிறை நிலவும் சூரியனும் 
குளிர்ந்து தன் அழகை பிரதிபலிக்க
ஒய்யாரமாக வளர்ந்து  வானத்தை பார்த்து
விருட்சம் நின்றிருக்க...

இலைகளாய் உருவாக்கி சிட்டுக்கள் வீற்றிருக்க 
வித்தகம் தந்து செயற்கை விளக்கை கண்டு 
எகத்தாளம் செய்தது இயற்கை...

இனிமையான கானம் இசைத்து பட்சிகள்
தங்கள் இருப்பிடத்தை அணுக...

பாரெங்கும் பயணித்து கலைத்தது
மாலைப்பொழுததை தனதாக்கி.

மயக்கும் தனிமையை ரம்யமாக்கி சென்றது
இதுவல்லவோ வியக்கும் விந்தை உலகம்!

- உமா பாலகிருஷ்ணன்

Tamil Kavithai Competition

 

நட்பு அழகானவை - (கவிதை போட்டி)

friends kavithai tamil
நட்பு
என்று தெரியா அன்பு அது
அறியா வயது ... குட்டை பாவாடை
போட்ட நாட்கள் அவை ... அத்துனை
*அழகானவை*...

*வெள்ளியும் ஞாயிறும்*
தொலைக் காட்சி காணுகையில்
கையில் தொலைக்கா நேசம்
விரல் பிடித்திருக்கும் அவை ... அத்துனை *அன்பானவை* ...

பதினாறு தாண்டா பருவமது
பாவாடை தாவாணி வீதி உலாவில்
அரும்பு மீசை தொடரும் போது
அச்சம் கொண்டு கை பிடித்து
நடையில் வேகம் காட்டும் அவை... அத்துனை *பாதுகாப்பானவை*...

கல்லூரியில் விலங்காத விலங்கியல்
நானும் ... தடுமாறும் தாவரவியல்
நீயும் படித்து முடித்து சின்னதொரு
கையேட்டில் கையெழுத்து
வாங்கி விடைபெற முடியா ஆனாலும்
மணம் முடித்து விடைப்பெற்றோம்
*விடுமுறையில்லா இயந்திர வாழ்வில்*...

அழைப்பு வரதான் செய்கிறது காலங்கள் மாறினாலும் ...

இரு ஒரு நிமிசம் *இடைவேளையில்*
பேசுகிறேன் என நீயும் ...

அவருக்கு *சட்னி போடுகிறேன்*...
இரு கூப்பிடுகிறேன் என நானும் ...

*உதடுகள் நான்கும் உரைக்க* தான் செய்கிறது ... காலத்தின் வேகத்தில் ..

ஆயினும்
உள்ளம் நினைக்க தான்
செய்கிறது *நட்பினை* ...

*முப்பது அகவையினை* தொட்டது
அல்லவா அது ...
பசுமை மாறா நினைவினை
சுமந்த வண்ணம் நாளும் ...

- அம்மு தண்டபாணி

Tamil Kavithai Competition

சிறகில்லா பட்டாம்பூச்சி - (கவிதை போட்டி)


butterfly kavithai
 வெற்றிடம் எங்கும் பரவிக் கொண்டிருக்கும் காற்றிற்கு‌ கூட பிரிவினையை வகுத்த - இந்த பிரிவினைவாதிகளின் தேசத்தில் கருவிலேயே பிரிவினைக் காற்றினை சுவாசிக்கத் தொடங்கியது
இந்த உலகத்தை காணாத பிஞ்சு மழலை - பாவம்
தன்னிகரில்லா உலகில் தனக்கோர் அடையாளத்தை தேடிக் கொண்டே இருக்கிறது- இந்த "சிறகில்லா பட்டாம்பூச்சி".
 - ப.முருகன்

12/12/19

பட்டாம்பூச்சி கவிதைகள் - (கவிதை போட்டி)

butterfly kavithai in tamil
Pattampoochi kavithai in Tamil
பட்டாம்பூச்சி காதல் கவிதை


அடர்ந்த காட்டில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
மேனியில் குறுந்தகை மின்னிட
இளஞ்சூரியன்  ஆரஞ்சு வண்ண
மை தெளித்து தங்க பொட்டு வைத்த
பட்டாம்பூச்சி ஒன்று
என்னருகே வந்தது!

தொட்டுப்பார்க்க கரம் நீட்ட
வெட்கத்தில் நாணி சிவந்து கொண்டது!
உயர்திணை அஃறிணை கடந்து
பட்டாம்பூச்சி என்னிடம் ஏதோ பேச வர
புது உலகில் ஐக்கியமானோம்

சுதந்திரவாதி என்னை
அருங்காட்சியத்தில் சிறை
வைக்கிறார்கள் என்று
வருத்தப்பட்டுக்கொண்டது! ​
பொதுவாய் சொல்லி வைத்தேன்
சுதந்திர நாட்டின் அடிமைகள்
நாங்கள் என்று!

ஒப்புக்கொள்வதாய் இறக்கை அசைக்க
புன்னகையோ என நான் அதிசயிக்க
பெயரென்ன என கேட்டதற்கு
மெல்லமாய் காதருகே
செல்லமாய் "காதலி" என்றது!

பெயரா? அழைப்பா? என்றேன்...
இயற்கை காதலர்கள்
நீங்கள் மட்டும் தானா?
இயற்கை உங்களை
காதலிக்க கூடாதா?
என்றவாறே பறந்து சென்றது...

காதல் சிறையில்
நான் சிக்கிக் கொள்ள
என் “காதலி”
பட்டாம்பூச்சியோ சுதந்திரமாய்
வானில்!

#ஜெயராஜனோ
 

Tamil Kavithai Competition

Experience the delicate beauty of butterflies through enchanting Tamil kavithai and poems. Explore heartfelt butterfly kavithai in Tamil, a poetic celebration of nature's winged wonders. Let your imagination take flight with captivating butterfly poems in Tamil, each verse a tribute to the grace and charm of these enchanting creatures. Dive into the world of butterfly kavithai, where words flutter like butterflies, painting vivid images in your mind.

5/12/19

உன் நினைவாள் - (கவிதை போட்டி)

tamil feeling kavithai
Sad Tamil kadhal kavithai
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கிறேன்
என் அன்பே...
உன் நினைவுகள் என்னை கொள்கிறது
உன் நினைவுகள் என்னை துரத்துகிறது
நான் இங்கு இல்லை
நீ தான் என்னுள்ளில் இருக்கின்றாய்
ஆழ்கடலை போல என் உள்ளம்
அமைதியாய் இருக்கிறது
உன் நினைவாள்...

- பொற்கொடி

Tamil Kavithai Competition


2/12/19

காதலாய் - (கவிதை போட்டி)

love feeling kavithaigal
feeling kavithai image

காதல்

எழுதிய
எழுத்துக்களிலெல்லாம்
நீயே ஒளிந்திருக்கிறாய்
காதலாய்!

வாசம்

நீளும் மழையிரவில்
என் பிணி தீர்க்கும்
மாமருந்து
அவளின் வாசம்...

கூடு

ஓரே கிளியின் கூட்டுக்குள்
முகவரி எதற்கு என்றாய்
இருந்தாலும் என்றேன்
இன்று என் முகவரி தேடுகிறேன்.

புத்தன்

ஆசைகளை
மறைத்தும், ஒளித்தும்
வாழும் வேளையில்
நாமும் மாறிப்போகின்றோம்
வாழும் புத்தனாக.

S. அப்பாஜி

Tamil Kavithai Competition