7/12/17
16/11/17
காதல் செய்தி!
உன் நினைவு
மின்னல்கள் !
எனது இதயத்தை...
தாக்கியதால்!
இரவு முழுவதும்...
கனமழை !
கண்களில்...
- தினேஷ் குமார் எ பி
24/7/17
சந்தோஷம் இலவசம்!
எனக்குள் உள்ள சந்தோஷத்தை!
இரவலாகக்கூட தந்துவிடுகிறேன் - ஆனால்!
விலைக்கும் கிடைக்காது!
எனது துக்கங்கள்!...
- தினேஷ் குமார் எ பி
10/5/17
காதலியின் பிரிவு
நீ தழுவிக்கிடந்த போது
பூரித்திருந்த என்மேனி,
இப்பொழுது மெலிந்து
காணப்படுகிறது.
காதலின் பிரிவை
அறிவிப்பதற்காக போலும்!
24/3/17
காதலியின் வருத்தம்!
நீ தீண்டாத என் கைகள் !
இப்பொழுது வளையல்களும்,
கழலும்படி மெலிந்தன !
காதலியின் வருத்தம் !!!
- தினேஷ் குமார் எ பி
21/3/17
10/3/17
இதழில் ஈரம்!
நீ பேசிய போது எச்சில் பட்டது
என் கன்னத்தில் !
ஏங்கியது உதடு !
அடடா படவில்லையே...
என் இதழில் ! என்று
- தினேஷ் குமார் எ பி
2/3/17
காதல் பரிணாமவளர்ச்சி
நீ தான்
வேண்டுமென என் மனம்
சொல்லும்போது
என் காதல்
முழு பரிணாமவளர்ச்சி
அடைந்தது
இன்று...