18/8/24

நண்பனின் மவுனம்

 தினம் தினம் திட்டும் அப்பாவை  

விட திட்டாமல் நகரும் 

நண்பனின் மவுனம் கொடியது!..

பாசத்தை கொடுத்த கடவுளே அப்பா

 எனக்கு உயிர் கொடுத்து உறவை 

கொடுத்து பண்பை வளர்த்து
 
பாசத்தை கொடுத்த- கடவுளே அப்பா!

அப்பாவின் நெஞ்சம்

 கஷ்டத்தை சொல்லாமல் மறைத்து

இன்பத்தை சொல்லி மகிழும்

 நெஞ்சமே அப்பாவின் நெஞ்சம்.

அன்று போல் இன்று இல்லை

 அன்று போல் இன்று இல்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது...

ஒவ்வொரு முறையும் உனை பார்க்கும்போதும்

ஆசையுடன் சுவாசித்த கணம் இன்று இல்லை...

நாட்கள் நகர நகர ஏதோ மாற்றம் இயல்பா...??? 

இல்லை என் எண்ணமா....எதுவும் புரியவில்லை.

வெட்ட வெளியில் யாருமே தீண்டா வண்ணம் உனை காத்தேனே...

மழை கொட்டும் முன்பே மார்போடு அணைத்து உனை பார்த்தேனே...

நீ இல்லா இடத்தில் எனக்கில்லை நீராகாரம்..

நீ தந்த சுகம் நீளுமே நாள்தோறும்...

பலகாலம் வாழ்வாய் என நினைத்தேனே..

நமக்குள் பாதியிலே  புளித்தது ஏனோ காதலாங்க..........!!!!???

அட அம்மா செஞ்ச மாங்கா ஊருகாய்ங்க வர வர ரொம்ப புளிகிது.....!!!


அர்த்தம்

 தொட்டதை விட பட்டதே அதிகம்

சந்தோசமாய் இருந்த ஓரிரு நிமிடங்களை விட 

சண்டை போட்ட மணிகளே அதிகம்.

ஆதரவை விட அவமானப்பட்டதே அதிகம்.

துணைவன் என்பதை விட 

துரோகி என்பதே பொருத்தம்.

சகிப்பு என்பதை விட

சமுக பொறுப்பு என்பதே அர்த்தம்.


தனிமை

 நீ இல்லாமல் தனிமையில் தவித்தக் காலங்கள் போய்.

நீயிருந்தும் தனிமையில் தவிக்கின்றேன் கொரோனாவுடன்!!

நிம்மதி

 மனிதனுக்கு தேவை நிம்மதி

அந்த நிம்மதியை தேடி அவன்

இல்லக்கிறான் அவனின் மதி

மதி இழந்த பிறகு அவன் அவனாகவும்

 இல்லை மனிதனாகவும் இல்லை.

உன் நினைவுகளுடன்

 உன்னுடன் சேர்ந்து ரசிக்க வேண்டிய மழையை!!!

நான் உன் நினைவுகளுடன் சேர்ந்து ரசித்தேன்!!!

கண்ணாடி

என் ஒளி அவள் மீது பட
 
வெட்கத்தில் கரைந்த என் முகம்
 
கரைந்த என் வெட்கத்தை
 
அவளின் கண்களில் பார்த்தேன்

மன அமைதி

 அமைதியான இடத்தில் ஆரவாரம் செய்யும் மனம் 

அமைதி களைந்த பின்னும் தொடர்கிறது 

நீயில்லா நேரம்

 நெற்றி வகிட்டில் பொட்டு வைக்காததற்கும்

மல்லி வேண்டாமென முல்லை சூடுவதற்கும்

மாலை வேளையில் ஓய்ந்து படுப்பதற்கும்

இட்டிலிக்கு எண்ணைப் பொடியை இணையாக்குவதற்கும்

தீண்டல் வேண்டாப் பொழுதுகளில் தள்ளியிருப்பதற்கும்

உனது அனுமதி தேவையெனில், நீயில்லா

 நேரத்தை கொண்டாடித்தான் தீர்ப்பேன்...

16/8/24

முதல் காதல்

 மீசை முளைப்பதற்குள் ஆசை முளைத்து
 
ஆழத்துளைத்து மூளை உறைந்து 
 
உடல் சிலிர்ந்து உள்ளம் போடும்
 
ஆர்ப்பாட்டத்திற்கு "முதல் காதல்" என்று பெயர்!!!!

தனிமையின் வெற்றி

 வெற்றியோ தோல்வியோ, எதையும் சமாளிக்கும்

மன உறுதியை தந்தது, என் தனிமை உலகம்!

தனிமையில் போராடுகிறேன், வெற்றி கிடைக்குமா என்று...

நான் வருந்தவில்லை ஏனென்றால்,

நான் தனிமையில் போராடுவதே,வெற்றி தான்!!!

மலர் தோட்டம்

 காற்றில் ஆடும் மலர்கள் விழிகளுக்கு

 பசுமை கொடுக்கும் ரோஜாகள்

உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்

 பச்சை பசுமையான மரங்கள்

 இது வண்ண மலர் தோட்டம்

14/8/24

நிலா

 நிலா தங்கள்முகம் வெண்மை அது போல

 தங்கள் உள்ளமும் அப்படி தானே?

உங்கள் உள்ளம் பிரகாசமானது.

பெண் உள்ளம் குடும்பத்திற்கு 

வெளிச்சம் கொடுத்து மகிழ்ந்தாள், 

நீங்களோ உலகத்திற்கே வெளிச்சம்

கொடுத்து மகிழ்வித்தாய் நன்றி நிலா.நன்றி . 

செல் இன்றி அமையாது உலகு

தொலைபேசி தொல்லையால் தொலைந்து போனது மனம்

லேண்ட் லைன் மாறி செல்பேசியாய் செல்லமாய்

மூன்றாம் கையாய் ஆனது இன்று வீட்டு உறவுகளும்

அறைக்குள்ளே அடக்கமாய் அனாதையாக செல் உடன்

பக்கத்து வீடும் தூரமாய் வேறு நாட்டு முகமறியா மனிதன்

கையடக்க ஹாய் என வீட்டிற்குள்ளே விபரீதமானவனாய்

என் நண்பனாய் என்றென்றும் உன்னுடனாய்

உலகமே நீயாக... செல் இன்றி அமையாது உலகு.......

பள்ளிப் பருவம்

தீப்பெட்டிகள் ரெயில்பெட்டிகளாகவும்,

சோடா மூடிகள் சக்கரமாகவும்,

மாறியிருந்த நாட்கள் அது...

மனம் முழுக்க மகிழ்ச்சியம்,

முகத்தில் புன்னகையும்,

குடியேறிய நாட்கள் அது...

மரத்தடியே மைதானமாகவும்,

நொன்டியே பொழுதுபோக்காகவும்,

நிலைத்திருந்த நாட்கள் அது...

பள்ளிப் பருவம் காணல் நீரானதே,

கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தவுடன்......... 


13/8/24

தேங்கிய மழைநீரில்

தேங்கிய மழைநீரில்

விளையாடிய குழந்தையின்

வீடு முழுவதும்

மீன்குஞ்சுகளின் பாதச்சுவடுகள்

இன்னிசை பாடும் வண்டுகள்

  இன்னிசை பாடும் வண்டுகள்!

 தேன் உறிஞ்சும் வனத்துப்பூச்சிகள்! 

பச்சை பசேலென செடி கொடிகள்! 

அழகை பூத்துக்குழுக்கும் பூக்கள்! 

விண்ணைதோடும் மலைகள்! 

வளரேந்து நிற்கும் மரங்கள்!

 துள்ளி குத்திக்கும் மீன்கள்!

இதுவே புண் அகை சிலிர்க்கும் இயர்க்கை !

நிழலாய் நான் வாழ்கிறேன்

என் கனவுக்குள் கனவாய் நீ இருக்கிறாய்

என் கண் விழிக்குள் பல படமாய் நீ தெரிகிறாய்

நிஜமாய் நீ இருந்தாலும்

நிழலாய் நான் வாழ்கிறேன்