28/4/24

விழியில் சிறை வைப்பாயா

 கார்தூவும் நேரம் வந்த காற்றாய் 

என்னை சிலிர்க்க செய்தவளே

அலைபோல அழியாத உன் நினைவாலே 

நிலையின்றி தடுமாறி தவிக்கின்றேன்

நீ சொல்லி சென்ற நாள் வரவில்லையென்றலும்

உன்னை அல்லி அனைக்கும் அசையிலே வருகிறேன்

முடியாதென சொல்லி முகத்தை மட்டும் மறைக்காதே

அது நீ நினைத்தாலும் நடவாது

கதிரவனை கருமுகில் மறைத்தாலும் 

அதன் கீற்றொளி பாய்வதுபோல், 

உன் பவளமேனி பிரகாசிக்கும். 

ஒருமுறை உன் செவ்விதழ் மலர, 

என் கரத்தினுல் உன் கரம்பதிய தோள்சாய்ந்தால், 

காயம் மறைந்து காத்திருப்பேன், 

காலமெல்லாம் விழி பூத்திருப்பேன். 

உன் கயல்விழி காணாமல் கரையும்

என்னை காக்க கருனை செய்வாயா? 

தென்றலோடு வருகிறேன் பூவே, 

தேன் விருந்து தருவாயா?!

விழியில் சிறை வைப்பாயா?! 


காதல் வந்துவிட்டது என என்னவேண்டாம்

உள்ளத்தில் இருக்கும் உதடுகள் மறைக்கும்!

விழிகள் ஏங்கும் பார்வையோ தயங்கும்!

மௌனம் தான் பேசும் கவிதைகள் பாடும்!

விரல்களோ இசைக்கும் வீனை போல நினைக்கும்!

உலகமே அதிரும் செவிகள் அதை இரசிக்கும்!

காதல் வந்துவிட்டது என என்னவேண்டாம்,

கொரனாவந்து தணிமைப்படுத்தபட்டவர்!






 

விலகும் முன் யோசி

 விலகும் முன் யோசி விலகியபின் யோசிக்காதே ஏனென்றால்
 
நீ தேவை என்று அவர் நினைத்திருந்தால்

நீ யோசிப்பதற்கு முன்னரே உன்னை தேடி வந்து இருப்பார்

மனதில் விழும் துளிகள்

 உன் வார்த்தைகள் என் மனதில்
 
விழும் துளிகள் அந்த துளிகளை வைத்து

மனதில் ஓவியம் வரைந்தேன் எதிர்காலத்தை

27/4/24

Kaalangkal Mudintha Pinpee

 காலங்கள் முடிந்த பின்பே கவிதைகள் வேண்டுமென்றால்....!

எழுத மனமில்லை, இருந்தும் எதிர்க்கத் துணிவில்லை...!!

யாரும் எழுதா கவிதையை எழுத எண்ணினேன்...!

வலிகளோடு சிறந்த வரிகளையும் தேடினேன்...!!

பிறகுதான் உணர்ந்தேன் என்னவளே என்னுடன் இல்லாதபோது ...!

அவளுக்கான வரிகள் மட்டும் இருக்குமா என்ன..??

முறிந்தது காதல்..! புரிந்தது உலகம்..!!

தொடர்ந்தது கண்ணீர்..! முடிந்தது கவிதை...!!

உடன்பிறா தங்கை

உடன்பிறா தங்கை உறவிலும்

துன்பத்திலும் துணையாக இருப்பதிலும்

இன்பத்தில் சிரிக்கும் மழலையாகவும்

வலிக்கு உற்ற மருந்தாகவும்

கிடைத்த முதல் வரமாகவும்

என் வாழ்வில் நீ தோன்றினாய்!

8/4/24

நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்

 வான தேவதை வாசல் வந்து, வாழ்க நீ வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

உனை நேசிக்கும் மனிதர்கள் நீ மகிழ்ச்சியோடு வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

இயற்க்கைத்தாய் பொருத்திருந்து நீ நிம்மதியாய் வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

உனை மனிதனாக தீர்மானிக்கும் மனங்கள்யாவும் நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

மஞ்சள் பூசியமுகமடி

 வானத்தின் முகம் நிலவடி என்தன் மனதின் முகம் உன்தன் முகமடி.
 
மஞ்சள் பூசியமுகமடி என் நெஞ்சை தொட்ட முகமடி.

அஞ்சாநெஞ்சன் நான்அடி உன்னால் காதலில் சாஞ்சேனடி.

6/4/24

இரண்டு இதயங்கள்

 இரண்டு இதயங்கள் இணைந்து இந்த உலகிற்கு

 ஓர் இதயத்தை பரிசளிக்கும் அதில் 

ஒன்று நீராகவும் மற்றோன்றாய் நாடாகவும் இருக்க
 
ஆசை கொண்டு என் காதலை உனக்களித்தேன்
 
அந்த காதலுக்கு வரமாக கிடைத்தது உன் இதயமடி 

5/4/24

பழகிப் போன பாதை

 பழகிப் போன பாதை...

முள்ளாக இருந்தால் என்ன?

ரோஜா இதழாக இருந்தால் என்ன?

வலி முள்ளுக்கோ...

ரோஜா இதழுக்கோ அல்ல...

கால் படித்திடும் பாதங்களுக்கே!

4/4/24

மனைவியை நேசிக்க தெரியாத கணவன்

 அழகிய மலர்களை ரசிக்க தெரியாத கண்கள், கண்களே இல்லை!

பூமிக்கு மழை பொழியாத மேகம், மேகமே இல்லை!

சிரிக்க தெரியாத மனிதன், மனிதனே இல்லை!

மனைவியை நேசிக்க தெரியாத கணவன், கணவனே இல்லை!

அவளுக்கு நிகர் அவளே

தவறென்று தெரியும் போது தட்டிக் கேட்க முற்படுபவள்.

தனக்கென இடம் பிடிக்க தடைகள் பல கடப்பவள்.

துச்சமென கருதிய இடத்தில் துணிந்தே நிற்பவள்.

உடைந்து போகாமல் உயர்ந்து செல்ல முயல்பவள்.

அன்புக்கு மட்டும் அடங்கி போக முற்படுபவள்.

வேதனைக்கும் வேடிக்கை காட்டி  வென்று எழுபவள்.

கற்று தேர்ந்து கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள்.

நம்பிக்கை கொண்டு நாளும் நடைப் போடுபவள்.

பல அவதாரம் எடுத்து பகைமையை துறந்தவள்.

அவளுக்கு நிகர் அவளே என்று அடையாளம் காட்டுபவள்.

1/4/24

என் இதயம் சொல்கிறது

 நீ என்னை விரும்புகிறாய் என்று

என் இதயம் சொல்கிறது!.

நீ எனக்காக எதையாவது உணர்கிறாய் என்று 

என் கண்கள் சொல்கிறது!.

நீ என்னை நினைக்கிறாய் என்று 

என் மனம் சொல்கிறது!.

ஆனால் இதுவரை நீ மட்டும் சொல்லாம்

அமைதியாய் இருக்கிறாய்!....

கண்கள் பேசும் மொழிக் காதல்

 ஓர் உயிர் ஈர் உடலாய் இருப்பது காதல்..!

முக்காலங்களையும் மறப்பது காதல்..!

நான்கு கண்கள் பேசும் மொழிக் காதல்..!

ஐம்புலன்களை இழப்பது காதல்..!

அறுசுவை வெறுப்பது காதல்..!

ஏழேழு ஜென்மமாய் தொடர்வது காதல்..!

எட்டாம் அதிசயம் படைப்பது காதல்..!

ஒன்பது கிரகங்களையும் இணைப்பது காதல்..!

பத்தோடுப்பத்தாய் விரல் கோர்ப்பது காதல்..!


என் இயற்கை தாயே

 பால்வடியும் உன் அழகு மிக பொலிவுஉடையது, மற்றும் தெளியுடையது,

அதின் அலங்காரா தலைவன் இயற்கைக்கு இனையான இறைவன், 

செல்லும் இடம் மெங்கும் இயற்கை கைகொள்ளா அழகை கொண்டுள்ளது, 

அது என்னையும் என் உள்ளத்தையும் காந்தம்போல் இழுகிறது. 

இயற்கையே உன் அழகை வர்ணிக்க உலக மொழிகள் எத்தனையோ உள்ளது, 

அதை என்னும்போது என் உடல் சிலிர்கின்றது, 

என்னென்றால் உன் அழகு வான்போல், 

வர்ணிக்க கடல் போல் வார்த்தைகள் இருபினும் அது போதாது, 

ஐம்பூதம் கொண்டார் என்னவோ உன் அழகின் தோற்றம் சிற்பி சிலைவடித்த

 கற்கள் உயிர் கொண்டதுபோல் அவ்வளவு கலைஅழகு கொண்டது,

ஆனால் உன் அழகு நிறைந்த செல்வத்தை அனைத்து உயிர்வாழ்களுக்கும்

 அம்மா தன் பிள்ளைக்கு தரும் அண்ணம் போல் 

அல்லி அல்லி கொத்துவிட்டாய் என் இயற்கை தாயே 


வாழ்க்கை வாழ்வதற்கே

 வாழ்வில் பிறப்பு  ஓர் மகிழ்ச்சியே 

வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே 

வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே 

வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம் 

வாழ்வில் தொழில் ஓர் போராட்டம் 

வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம் 

வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம் 

வாழ்வின் சவால்களில்  ஓர் போராட்டம் 

வாழ்வில்  குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம் 

வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம் 

வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம் 

வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம் 

வாழ்வே ஓர் போராட்டம் 

வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம் 

வாழ்க்கை வாழ்வதற்கே