14/7/24

காதல் மொழி

 தென்றல் தீண்டும் நேரத்தில் என் மனம் நிறைந்த காதலோடு காத்திருக்கிறேன்...

உந்தன் கைகளை கோர்த்து கொண்டு நான் நடிக்க பூத்திருக்கிறேன்...

தெளிவான முகத்தோடு தேன் சொட்டும் வார்த்தைகள் கொண்டு வருவாயோ!!!! .

இல்லை மலர் வனம் மயங்க இந்த மங்கையிவள் சினுங்க சிறைபிடிப்பாயோ!!!

காத்திருக்கிறேன் நான்  உந்தன் காதல் நினைவுகளோடு உறவாடி கொண்டு...

மெல்ல வந்து என் மௌனம் மொழி கேளடா....

6/7/24

நினைவுகள்

 நமக்கு எத்தனை வயதானாலும்

ஒருபொழுதும் நம்மளோட

 நினைவுக்கு வயது ஆவது

 இல்லை நம்ம உடம்புதான்

 தளர்ந்து போகிறது ஆனா

 அனைத்து நினைவுகளும்

  இளமையாகவே உள்ளன.

5/7/24

பேசா சித்திரம்

 பேசா சித்திரமும் உன்னைக் கண்டதும்

வார்த்தைகளைச் சேகரித்து வாக்கியங்களில் 

கோர்த்து தன்னுள் விமர்ச்சனம் செய்து கொள்கின்றதே.

                      

4/7/24

சமூக இடைவெளியுடன் பழகு

 மீண்டும் வந்துவிட்டது ஊரடங்கு
 
கொரோனாவை விரட்ட நமக்கும் இருக்கு பங்கு

உறவினர் ஆக இருந்தாலும் சமூக இடைவெளியுடன் பழகு

நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படகூடாது  தீங்கு

3/7/24

தாயின் மடி சொர்க்கம்

கல்லறையில் உறங்க சொன்னால் கூட உறங்குவேன்..
 
அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால் துன்பங்கள்

 வரும் தருணம் தாயின் மடி சொர்க்கம்.

முகத்தை காணும் முன்பே நேசிக்க தெரிந்தவள் 

தாய் மட்டுமே தாயை வணங்குவோம்

தாய்மையை போற்றுவோம். 

2/7/24

உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்

 உள்ளது எல்லாம் தொலைந்தாலும் மீண்டும்

 அடைந்து விடலாம் என்றிருந்தேன் இப்போது

 உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்!!!

1/7/24

உன் பெயர்

 வெட்கத்தை பற்றிய

கவிதைகள் எத்தனையோ

படித்திருக்கிறேன்...

வெட்கத்தை வரவழைக்கும்

கவிதையை முதன் முறையாக 

பார்க்கிறேன் உன் பெயர் !!!

30/6/24

உறவா உயிரா

 அம்மா என் உறவா, உயிரா?

இன்னும் நான் அறியவில்லை,

இவளை தாண்டும் ஒரு அன்பை!!

இன்னும் நான் நினைக்கவில்லை,

இவளை விடவும் வேறன்பை!!

என் வானம் இருண்டாலும்,

எனது கண்ணில் ஒளியாவாள்!!

எவர் விட்டுப்போனாலும்,

என்னை பெற்ற கடமை விட்டுக்கொடுக்காது பேசிடும்!!

காரணம் இன்றி தாங்கின உறவு,

காலங்கள் கடந்தாலும் என்றும் போதும்

இவள் சேய் என்ற ஓர் உணர்வு!!




29/6/24

நம் உணர்வுகள்

உறவுகள் நெறுங்கிய போது வெறுக்கின்றாய்....! 

விலகிய பிறகு நேசிக்கின்றான்....! 

எதை நோக்கி பயணிக்கின்றது நம் வாழ்வு....! 

உறவுகள் என்பது கடையில் வாங்கும் பொருளல்ல.....! 

அது நம் உணர்வுகள்....!  

28/6/24

சாரல் மழையில்

சாரல் மழையில் நனையாமல் இருக்க
 
உன் குடையினுள் நுழைந்த எனக்கு
 
காதல் மழையில் நனையாமல்

இருக்க முடியவில்லை ... 

27/6/24

என் குடும்பம்

நான் மற்ற வர்களிடத்தில் தூக்கி 

         எறியப் படும் போது

என் குடும்பம் சொன்னது உனக்காக

          நான் இருக்கிறேன் என்றது!


26/6/24

உன்னைப் பார்த்ததும்

உன்னைப் பார்த்ததும் ஏனோ என்

          உதடுகள் மட்டும் சிரிக்காமல்

என் கண்களும் சேர்த்து சிரித்து

          விடுகின்றன உன்னால் வெட்கத்தில்!

25/6/24

உன்நினைவுகளில் நான்

 உன் இடையைப் பார்த்துநான் காதலித்திருந்தால்

            என்றோஉன்னை மறந்திருப்பேன் நான்!

ஆனால் உன்இதயத்தை காதலித்தாலோ என்னவோ

             என்றும் உன்நினைவுகளில் நான்!

24/6/24

ஒருதலைக் காதல்

 நீ ஒரு முறைமட்டும் என்னைத்

திரும்பிப் பாரடி பெண்ணே!

என் ஆயுள்வரை அந்தப் பார்வை

 மட்டுமே போதுமடி கண்ணே!

23/6/24

ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்

 கட்டி அணைக்க, தட்டிக் கொடுக்க, செல்லச் சண்டைகள் ஈட,

சண்டைக்குபின் வரும் மௌனத்தை கலைக்க,

செல்ல பெயர்கள் சொல்லி அழைக்க,

கெஞ்ச கொஞ்ச, பாசம் வைக்க, நேசம் வைக்க,

கீழே விழும் போது கைக் கொடுக்க,

கதறி அழும் போது தோள் கொடுக்க,

வெற்றி பெறும்போது அதைப்பார்த்து சிரிக்க ரசிக்க,

சொல்லாமல் நமக்காக பிரார்த்தனை செய்ய,

எதிர்பாராமல் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற,

பாராட்ட சீராட்ட, தலை கொதி விளையாட, மொத்தத்தில்

உள்ளமாக உணர்வாக உதிரமாக  உயிராக இருக்கும் 

ஒரு உறவு கிடைத்துவிட்டால் போதும்,

வாழ்வின் அர்த்தம் புரிந்து விடும்,

வாழ்வே அழகாய் மாறி விடும்!!!


எட்டு மடிப்பு சேலை

  நீ எட்டாமல் கட்டிய எட்டு மடிப்பு சேலை

 உந்தன் அழகை என்னிடம் சொல்லாமல்

 சொல்லி கொள்ளாமல் கொள்ளுதடி.

19/6/24

என் உயிர்

 உன்னை பார்க்க நினைத்தேன் பார்த்தேன்

உன்னிடம் பேச நினைத்தேன்

சில நிமிடம் பேசினேன்

உன் கை பிடிக்க நினைத்தேன் 

ஆனால் நீ என்னை விட்டு விலகிவிட்டாய்

நீ வேண்டுமானால் விலகிவிடலாம்

நான் விலகமாட்டேன்

என்றும் உன்னுடனே என் உயிர் 💖💖

16/6/24

அன்பு மதம்

அன்பெனும் மதத்தை ஆளும்
      ஆண்டவன் ஒருவன் ஆகும்.

அன்பையே மதமாய்க் கொண்டு
      அனைவரும் வாழ்வோமென்றால்,

இன்பமே பூக்கும் மக்கள்
       இனியநல் வாழ்வு தன்னில்.

அன்பினைத் தானே மதங்கள்
      அனைத்துமே உரத்துச்சொல்லும்.!

ஆதியில் இல்லை சாதி
          அப்போது இல்லை மதங்கள்

பாதியில் வந்த தன்றோ
          பாழ்போன சாதி மதங்கள்.

சாதியும் மதமும் தானே
          சமுதாய அமைப்பில் தீயை

ஊதியே பெருக்கி நமது
          ஒற்றுமை அழித்த தம்மா!

மனிதனை, மனிதா நேசி!
        மறந்திடு மற்ற தெல்லாம்.

புனிதமிகு வேத மெல்லாம்
         புகன்றிடும் அன்பை மதமாய்

இனிவரும் நாளில் ஏற்பாம்
         ஈடுகள் அன்பிற் கில்லை.

மனிதனே! அன்பு வாழ்வு
          மணக்கட்டும் பாரி லெங்கும்.!
                          

காதல் உறவு

 உயரிய அன்பில் உருவான உணர்வு
 
உலகில் கிடைக்கும் காதல் உறவு

ஒரு முறை வாழ்க்கையில் பல முறை மனதில் 

பாய்ந்து ஓடும் நதியாய் படர்ந்து வளர்ந்து வருமே

சில முறை சிறந்து சினம் சிறிது மறந்து 

சிந்தனைக்குள் புகுந்து விளையாடுமே

உடனடி முடிவு உடலுக்கு கேடு 

உறுதியாக இருந்து உயரம் பறந்து

உரிய நேரத்தில் உண்மை உணர்த்தி 

உறவை வலுப்படுத்தி வளமாக்குவோம்... 

16/5/24

உன்னால் பெண்ணே

 கண்கள் இருப்பது உன்னை கணத்தானோ..!!

இதழ்கள் இருப்பது உன்னிடம் பேசதனோ..!!

இதயம் இருப்பது உன்னை நேசிக்கதானோ..!! 

என்றிந்தேன்.!!!! ஆனால் உன்னை நெருங்கிய

தருணம் கண்கள் வெக்கபடுகிறது..!!

இதழ்கள் பேச முடியாமல் திக்கி தவிக்கிறது..!!

இதயம் துடிப்பதை மறந்து நின்றுவிட்டது..!!

 ஏனோ உன்னால் பெண்ணே..