10/3/17
2/3/17
காதல் பரிணாமவளர்ச்சி
நீ தான்
வேண்டுமென என் மனம்
சொல்லும்போது
என் காதல்
முழு பரிணாமவளர்ச்சி
அடைந்தது
இன்று...
- தினேஷ் குமார் எ பி
27/2/17
எனது காதலே
எத்தனை வெற்றி பெற்ற பிறகும்
உன்னிடம் தோற்றேன் என்பதே,
எனது பெரிய கவலையாகி போகின்றது
ஒவ்வொரு நாளும். ! எனது காதலே !
- தினேஷ் குமார் எ பி
24/2/17
17/2/17
13/2/17
3/2/17
2/2/17
கடற்கரையில்!
கடற்கரையில்
பேசிய பிறகு
காலில் ஒட்டிய
மணல் அல்ல
எனது காதல்
விடுவந்ததும்
வாசலில் தட்டி
செல்ல...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
25/1/17
ஊமை காதல்!
குழந்தையை இழந்த தாய் போல
உன்னை இழந்து தவிக்கிறேன்...
ஒவ்வொரு நொடியும்...
எனது அழுக்குரல்!
உனக்கு எப்போது கேக்காது...
ஏன் என்றால்?
ஊமையாகி போன
உண்மையானது காதல் எனது...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
24/1/17
மறக்க இயலவில்லை!
காதலில் போராட்டம்...
கண்களில் தெரியுதடி...
கண்ணீரில் இமை முடி...
உன் உருவம் மறையுதடி...
மறைத்து வைத்து பார்த்தேன்...
மறுபடியும் தெரியுதடி...
மனதில் உள்ள காதலை...
மடி ஏந்தி தந்தபடி...
மறு வாழ்வு பூத்தது - உனக்கு
மனபந்தல் கல்யாணத்தில்...
மறக்க இயலவில்லை...
மரண போராட்டத்தில்...
உடல் பிரித்த ஆவிகூட...
உன்னையே சுற்றுமடி...
உனக்கு பிடித்தல் மட்டுமே
மறுபிறவி எனக்கிடி...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
23/1/17
அன்னை, தந்தை!
மண்டிட்டு பசி என்றால்?
தன் மடிதரும் என் தாய் இவள் (பசு)!
பால் தருபவள் நம் அன்னை என்றால்?
நீயும் எங்களது அன்னை தானே!
என் அன்னையும், மண்ணையும் விட்டுத்தர மனம் இல்லை!
- தினேஷ் குமார் எ பி
20/1/17
என் தம்பி (காளை)
19/1/17
தந்தை தழுவுதல்!
சீவிய கொம்புகளில்..
சிறிய உதிரத்தில்...
போட்டு இட்டு...
எங்கள் உணர்வுகளை தழுவுகிறோம்...
என் தந்தையிடம்!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
அன்னை நீ!
என் இனத்தை சுமந்து !
பால் தந்த அன்னை நீ!
இப்போது உன்னை இழந்து விட்டால்!
நாங்கள் தான்!
எப்போதும் அனாதைகள்!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
17/1/17
தூசி இல்லை காதல்
உன்னை காணாமல் இருக்க!!!...
காற்றில் தூசியாகிறேன்!!!..
நீ நின்ற இடமெல்லாம்!!!...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
3/1/17
இதழில் அன்பு!
நீ ஆயிரம் முறை சொல்லியும் புரியதா காதல்!...
அரை நொடியில் சொல்லியது உனது முத்தம்!!!...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
30/12/16
நலம் அறிய ஆவல்!
உன்னை நேசித்துவிட்டு...
விலகி போனவர்கள்!..
யாராக இருந்தாலும்!!!
நீண்ட நாள் கழித்து பார்த்த போது...
நாம் கேட்டுக்கும் முதல் கேள்வி
நீ எப்படி இருக்க?
- தினேஷ் குமார் எ பி
28/12/16
பூவின் இதழ் சிவப்பு!
காலையில் ஆயிரம்!!!
மலர்கள் மலர்ந்தாலும்...
உன் இதழ் புன்னகையே!!!
என் நினைவில் மலர்கின்றன!..
தினம் தினம்!!!..
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
2/12/16
வாழ்க்கை!
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?

























