22/12/24

என் இதயம்

இரு இதயங்கள் இணைந்து... 

இன்பத்தில் தத்தளிக்கும் நாம் பேசும்பொழுது....

எதிர்பாராத வண்ணம் என் வாழ்வில் வந்தாய்.....

எண்ணற்ற அதிசயங்களை ...நிகழ்த்தினாய்....

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி.......

காலம் செய்த தவத்தினால்.....

கிடைத்த வரம் நீ அதை யாருக்கும்....

யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மனம் இன்றி...

தவிக்கிறது என் இதயம்....

ஆகாய நிலவுக்கு பிறந்தவளா

 தேர்வு அறைக்குள் தேவதை வருவதுண்டு டா.

அன்று ஒரு வழக்கமான நாளாகவே இருந்தது.
 
அவள் வருகைக்கு முன்பு வரை.
 
ஏங்கிருந்து தான் வந்தாள் இப்படி ஒருத்தி
 
என்று உள்மனதின் ஊசல் கேட்கிறது.
 
வானத்து தேவதை வழி மாறி வந்து விட்டால

நம் வகுப்பறைக்கு என்று தோன்றும் அளவுக்கு.
 
அழகு என்ற சொல்லுக்கு அடையாளம் கொடுத்தவள் அவள்.
 
இவள் அமிர்தத்தை உண்டு வளர்ந்தவளா

இல்லை ஆகாய நிலவுக்கு பிறந்தவளா.
 
அவளிடம் பேசிய நினைவெல்லாம்
 
பேதலிக்க வைக்கிறது இன்றுவரை.
 
பேசாத வார்த்தை எல்லாம் பேய்போல்
 
வந்து மிரட்டுகிறது சொல்லாமலே பிரிவது கூட

19/12/24

நினைவும் நீ

நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதி நீ

என்னை விட்டு நீங்காத நினைவும் நீ

வாழ்க்கையின் இருளை நீக்கும் சுடர் நீ

காயங்கள் ஆற்றும் கல்வனும் நீ

கண்ணீரைத் துடைக்கும் என்வாழ்த் துணையும் நீ

17/12/24

அற்புத வடிவம்

 அம்மா மனதுக்கு ஆறுதலையும் உடலுக்கு தெம்பையும் தரும்

அற்புத சொல் அம்மா உச்சரிக்கும் உதடுகளுக்கு 

உத்வேகம் தரும் அட்சய பாத்திரம் அம்மா எல்லா 

உயிர்க்கும் பொதுவான மூல மந்திரம் அம்மா உணவில் கூட

உயர்ந்தவைகளை பிள்ளைக்கு தரும் தியாக பிரம்மம்


7/12/24

ஒரு நாள்

 குடியை நிறுத்த நாளை நாளை என்று நாளைக் கடத்தி வந்தவன

ஒரு நாள் நிறத்தியே விட்டான் தன் உயிர் மூச்சை...