18/2/14
எனது கவிதைக்கு பரிசு
என்னோட கவிதை டாப் 20 காதல் கவிதையாக ரேடியோ சிட்டி 91.1 பண்பலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை நான் மிக மகிழ்ச்சியுடன் தெருவிக்கிறேன்.நன்றி!
கவிதை தலைப்பு : குடைபிடித்து செல்லாதே!
எனது - உயிர் பிரிந்து
சென்ற பிறகும்...
காற்றாக கலந்து
மேகத்தில் உறைந்து
கண்ணீர் என்னும் பெயரில்
மழையாக விழுவேன்!
உனது
இதயத்தில் இடம் பிடிக்க
குடைபிடித்து செல்லாதே!
கவிதை தலைப்பு : காதல் நெறிசல்!
உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று !
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு நெறிசல்
இப்போதெல்லாம்
பச்சை விளக்கு விழுந்த பின்பும்
கால்களில் பயணம் தடை பெறுகின்றன!
நீ இல்லாத இந்த சாலையில்!...
கவிதை தலைப்பு : காதல் காயங்கள்!
உன்னை காயப்படுத்துவது
என் கண்ணிருக்கு
கூட விருப்பம் இல்லையாம்.
அதனால் - என்னவோ
உன்னை பாத்ததும்
ஒளிந்து கொள்கின்றன.
கண்ணீர் சில காயங்கள்...
3 Please share your thoughts and suggestions!:
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் எனது இனிய நண்பரே...
மிகவும் நன்றி! மீண்டும் வருக ! திண்டுக்கல் தனபாலன்...
உபயோகமான தகவல்கள்.வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்
கருத்துரையிடுக