30/7/13

கவிதைக்கு முத்தமிட


tamil kavithai pictures

வலி இருந்தால்
சொல் அன்பே!
வைத்தியம் செய்கிறேன்...
அன்பு கலந்த முத்தங்களில்!


27/7/13

காவியமாய் என்னவள்

ஓவியம்!
இம் மூன்றையும்
ஒன்றாக பார்த்ததில்லை.
இப்போது பார்கிறேன்
என் எதிரில்...மட்டும்!


26/7/13

கூந்தலில் வைத்த பூ

kadhal pirivu kavithai in tamil

உன் கூந்தல்அவிழ்ந்து போகும்
சில நேரங்களில்   மட்டும்!
சற்று விழுந்து தான் போகிறேன்!

உனது காலடியில்...
கூந்தலில் வைத்த பூ
உதிருமென நினைத்து...


ஆச்சரியம் உன் கண்கள் !

eye tamil kavithai in dinesh 

ஆச்சரியம்!

உன் கண்களின்...

சிமிட்டலில் கொஞ்சம்

சிதறிப்போகின்றன.

இந்த தஞ்சை காவியம்!

கண்ணில் ஓவியம்!

Sogamana kadhal kavithai tamil

உனது கண்களின் அழகை
நேரடியாக பார்த்தால்!
எங்கு நான் தொலைந்து
போய்விடுவேன் என நினைத்து.
கண்ணில்"லென்ஸ்"
அணிந்து கொள்கிறயா ?அன்பே!

17/7/13

இதயத்தில் ஒரு விபத்து

love kavithaigal in tamil

உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று!
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு  நெறிசல்
இப்போதெல்லாம்
 பச்சை விளக்கு விழுந்த பின்பும்
 கால்களில்  பயணம் தடை பெறுகின்றன!
 நீ இல்லாத இந்த சாலையில்!...


12/7/13

காதல் உலகில் காதல் சுகமே

Images Tamil Kavidhai Latest Kadhal

கனவு மற்றும் கற்பனைகள்!
உன் மீது கொண்ட காதலின்
மனநிலையை
ஊக்குவிப்பதாக உணர்கின்றேன்.

உன்னிடம் பழகிய பிறகு...

இயற்கை அழகை இன்னும் அழகூட்டும்!
உனது கண்கள் உணர்ச்சி மற்றும் 
உணர்வுகளை காதல் வாழ்க்கை ஆக்கிரமித்தது

உனது புன்னகை!

சாதனை மற்றும் ஆய்வு;
 ''நம் காதல் குறித்து''
அன்பு மற்றும் விரிசல்!
காதல் வாழ்வின் ஒரு தன்னிறைவு!
காதல் உலகில் காதல் சுகமே!
உன் விரல்கள் பிடித்த போது!
நான் நானா ஆகின்றேன்! நம்பிக்(கை)!
(உன்)னுடன்  தினேஷ்...

அவள் மீட்டிய கவிதை

tamil kavithai wallpaper

நமது விழிகள்!
பேசி கொண்டிருக்கும் போது
நம் உதடுகள்!
பிரித்தன விடை பெற சொல்லி
கைகள் விடை சொல்கிறது...
கண்கள் விடை பெறாமலே!..

அன்னையர் தினம்!

amma kavithai in tamil language

இன்று என் பள்ளியில் அன்னையர்! தினம்
கூட்டிச்செல்ல அம்மாயின்றி அனாதையாய் நான்!

8/7/13

நட்பின் முதல் படி காதல்!

Tamil Kavithaigal About Friends

நட்பு! காதலாக மாறலாம் தவறு இல்லை...
ஏன் என்றால்? நட்பு! கொள்வதே
அவர் மிது கொண்ட அன்பினால் தான்
நட்பின் முதல் படி காதல்!

3/7/13

மன்னித்துவிடு தோழி!...

Natpu-Kavithai


பொய் சொல்லுவது தப்பல்ல!...
உண்மையை மறைப்பது தான் தப்பு!...நண்பர்களிடம்!
அதனால் சொல்லிவிட்டேன் தோழி!...
சொல்லிவிட்ட வார்த்தை மறந்துவிடு தோழி!...
செய்துவிட்ட தவறுக்கு மன்னித்துவிடு தோழி!...

29/6/13

அழுதாலும் சிரித்தாலும் சந்தோஷம் காதலில்!

love-pic-kavithai

ஒரு நல்ல புரிதலுக்கு பிறகு தான்...
நீண்ட போர் உண்டாகும்!...
இரு இதயங்களுக்கு...
இடையில்!...
அழுதாலும் சிரித்தாலும் சந்தோஷம்
காதலில்! மட்டும்

27/6/13

காதல் கடிதம்!

Hikoo Kavithai-Love Latter

நீ மிதித்த 

பின்பும் கசங்கவில்லை 

எனது {காதல்} கடிதம்

முகவரி !

tamil-kavithaigal-dinesh kavithai

எனது முகம் கட்டாமலே !  

அறிமுகம் ஆகிறேன் என்னவள் வீட்டில் ! 

என்னை பற்றி, அவள் வீட்டில் பேசியதால்...

20/6/13

மன்னிப்பாயா!

kavithai in tamil love

என்னை...நீ அழைத்த போது கவனிக்கவில்லை ! 
இப்போது உனது குரல் கேட்டு திரும்புகிறேன்! 
நீ இல்லாத இந்த நாளில்! என்னவளே... 
உனக்கு நன்றி கூறிவிட்டால்! 
உன் அன்பு கடன் தீர்ந்து விடுமன நினைத்து!
சொல்லாமலே போகிறேன் ! 
கனத்த இதயத்தோடு...மன்னிப்பாயா!

18/6/13

கைபேசி எண் !

என்னவளே
இந்த உலகத்தில்,
உனக்கு  மிக  கடினமானது!
எனது  கைபேசி
(எண்னை-என்னை ) மறப்பது !...

11/6/13

பூவின் பெயரோ பெண்மை!

Tamil Kavithai Images

நாள் தோறும் உன்னை சூரியனை சுற்றும்
கோள்களாக சுற்றி வருகிறேன்.
உன் கண்களின் புவி ஈர்ப்பு விசையால்.....

என்னவோ?

4/6/13

என்னவள் வருத்தம் !

Love Failure Kavithai

வேர்களில்  ஒளிந்து  கொண்ட  பெண்ணவள்  !
இவள்  கூந்தல்  கிளையில்  சிக்கிகொண்டு  தவிக்குமோ  எனது  காதல் !
இவள்  வற்றி  போகும்  கண்ணீரில்  ! இவள்  சிறகுகள்   சரிதனவா?
இம்மண்ணில்  வேரின்றி  போனது ! காதல்...
இது இலையுதிர்காலம்  ஆம்!
உன்னை  விட்டு  பிரிந்தது  இலை  மட்டுமல்ல  இந்த  மரச்சிலையும்  தான்! 


30/5/13

சிலை அழகு


Tamil-Kavitha- Blog-Haiku-Kavithai

ஆச்சர்யம் ?

பாறையும் சிலையாய்!
 மாற ஆசை பட்டது! அன்பே !...
உன்னை பார்த்த பின்பு !

17/5/13

த‌லை குனிந்த தாமரை


Tamil Kavithai About Love


தெரு விளக்கு அணைந்த படியே நிலவு ஊர்வலம் ! 
ஒற்றை மெழுகு வெளிச்சத்தில் ஓவிய கண்காட்சி ! 
என்னவள் முகம்...!
உருகியது மெழுகு மட்டும் அல்ல !
நானும் தான் அன்பே !