15/7/16
7/6/16
எனக்கே உரிய சந்தோஷம்:
உனக்காக இதை செய்தேன் - என்பதை
உன்னிடம் சொல்வதை விட
உனக்கு பிடித்தது அனைத்தும் - செய்தேன்
என்பது எனக்கு அது சந்தோஷம்!
- தினேஷ் குமார் எ பி
12/4/16
நமது காதல்
எனக்கு இது போதும்
என்று நினைத்தது
உன்னை மட்டும் தான்
அதனால் தான் நீ கேட்டும்
என்னால் விட்டு கொடுக்க
முடியவில்லை உன்னை.
- தினேஷ் குமார் எ பி
1/3/16
8/1/16
எதிர்கால கவிதை!
இதுவரை உன்னை பார்க்கமால்
போனது எனது இறந்தகாலம்!..
உன்னை மட்டுமே நினைத்து கொண்டுருக்கிறேன்
இது எனக்கு நிகழ்காலம்!..
நீ மட்டுமே வாழ்க்கை என்றால்
அதுதான் எனக்கு எதிர்காலம்!...
- தினேஷ் குமார் எ பி
30/12/15
வசந்தகாலம்!
உனது இதழ் வாடும் என்றால்
அது எனக்கு இலை உதிர் காலம்!...
உனது இதழ் நாவினால் ஈராமனால்
அது எனக்கு மழை காலம்!...
உனது இதழ் சிலிர்க்கும் என்றால்
அது எனக்கு குளிர்காலம்!...
உனது இதழ் விரிந்து...
எனது இதழில் இணைந்தால்!...
அது எனக்கு வசந்தகாலம்!
- தினேஷ் குமார் எ பி
24/12/15
நீ எனக்கு குழந்தையம்மா...
எனது அன்னை கோவப்படும் நேரத்தில்...
அவளது தொப்புள் கொடியின் வாசலில்
நின்று பார்கிறேன் நான் குழந்தை பருவத்தில்
செய்த குறும்புகளை....
அம்மா நீ எனக்கு இப்போது குழந்தையம்மா...
- தினேஷ் குமார் எ பி
22/12/15
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உனக்காக எத்தனை கவிதை எழுதினாலும்
இந்த ஹைக்கூ கவிதை மட்டும்
நாளைக்கு அடிக்கடி சொல்ல தோன்றுகின்றது - அன்பே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று!
- தினேஷ் குமார் எ பி
பிறந்தநாள் முன்னிட்டு!
நாளை பூக்கள் அனைத்திற்கும் விடுமுறை
உன் பிறந்தநாள் முன்னிட்டு....ஏன்?
எத்தனை இதழ்கள் மலர்ந்தாலும்
உன் இதழில் மலரும் புன்னகைக்கு
அது ஈடுல்லை என்று....
- தினேஷ் குமார் எ பி
21/12/15
பிகாசோ ஓவியம்!
ஏழு வர்ணங்கள் வைத்து!..
ஓவியம் வரைகின்றேன்!
எனது நாவினால் - நீ
பிகாசோ உதட்டு ஓவியம்
என்று தெரிந்தபின்பு...
இப்படிக்கு முத்தம்!
- தினேஷ் குமார் எ பி
15/12/15
திருட்டு கவிதை!
இல்லாதவன் எடுத்தால் அது திருட்டு!
அரசாங்க வேலை பார்ப்பவன் எடுத்தால் அது லஞ்சம்!
அரசியல் வாதிகள் எடுத்தால் அது ஊழல் !
ஊழல் செய்தவன் ஒளிந்து கொள்கிறான்
சட்டத்தின் ஓட்டை வழியாக!..
பசிக்கு எடுத்தவன் தொங்குகிறான்!
தூக்கு வழியாக....
இதில் யார்? திருடர்கள்!
- தினேஷ் குமார் எ பி
14/12/15
நி என் விழித்திருந்த கனவுகள்!
எனது இதயத்தை
துளையிடும் அம்பு...
உன் கண்ணின் - இமை
என்று தெரியாமல்...
விழித்து இருந்தேன்
இரவு முழுக்க...
என்ன ஒரு கூர்மை!
உனது கண்ணிமை!
- தினேஷ் குமார்
12/12/15
என்னவளுக்கு கோபம்!
எனது மீது என்னவளுக்கு கோபம்!
என்னை அனைக்கும் முன்பு!
விளக்கு முதலில் அணைக்கிறாய் என்று!
- தினேஷ் குமார்
27/11/15
என் அன்பு காதலியே!
நேற்று தான் அழகானது இந்த நிலவு உன்னை போல!
நிலவு தன்னை அழகுப்படுத்திக்கொள்ள...
இத்தனை ஆண்டுகள் ஆகின அடடா!
உன்னை பின் தொடர்ந்து வந்தது
உனக்கு தெரியவிலையே!
அழகிய நிலவே!
என் அன்பு காதலியே!
- தினேஷ் குமார்
24/11/15
வாழ்க்கை பூக்கள்!
வாழ்க்கை பூக்கள் மாதிரி - யார்
அதிகம் ரசிகின்றனரோ - அவர்களுக்கே
அதிகம் கிடைக்கின்றது இன்பமான தேன்!
























