செவ்வானத்தின் முதலையும் முடிவையும் அறிந்தவரில்லை...
அதுபோல் காதலின் வருகையையும் பிரிவையும் அறிந்தவர் எவரும் இல்லை...
காதல் மழைச்சாரல் போல் மனதை நனைக்கும்!
மழை நின்ற பின்னும் நினைவாய் நிலைக்கும்!
அந்நினைவு மழையன்றியும் மனதில் பசுமையாய் படர்ந்திருக்கும்!
அரைகண நினைவு காலத்திற்கும் கணமாய் கணக்கும்!
சுமையிலும் சுகம் நஞ்சிலும் இனிமை காயத்திலும் காதல்...
இவற்றை உணர முடிவது காதலில் மட்டுமே !





