23/3/23

தமிழ்மொழியே!

tamil mozhi kavithaigail

மொழி எனும் கருவறையில்
மூத்த மகளாய் பிறந்த தமிழ்மொழியே!
மூத்த குடியாம் எங்கள்
முன்னோர்களைப் பேச வைத்த முதல் மொழியே!

குழந்தை அழுகையிலும் தேனாய் 
இனிக்கும் தேன்மொழியே!
அம்மா அதட்டலிலும் அன்பாய் கலந்த
அன்புமொழியே!

கம்பன், வள்ளுவனை அறிமுகப்படுத்திய
காவிய மொழியே!
கண்ணகி கோவலன் கதையை காவியமாய் தீட்டிய
காதல் மொழியே!

கன்னல் போல் இனித்திடும்
களிபேருவகை அளித்திடும் கனிமொழியே!      
குருதி வழிந்தோடும் வரை போராடும் 
வீரமிக்க தேசமொழியே!

தஞ்சை பெரிய கோவிலை கண்டு
வியக்க வைத்த சரித்திர மொழியே!
தாலாட்டி மகிழ்வில் தினம்
சீராட்டும் என் தமிழ்மொழியே!

பல நூற்றாண்டுகள் கடந்தாலும்
பழமை மாறாது பன்மை மொழியே!
பாண்டிய மன்னனே கலங்க வைத்த
வீரமொழியே!

அவ்வைக்கு அமுதம் அளித்த
அமுதமொழியே!
ஆயிரம் தடை வந்தாலும்
அழிவில்ல அழகுமொழியே!

- AISHVINI A/P MUNIANDY