31/12/21

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புத்தாண்டு நல்வாழ்த்துகள் - கவிதைகள்: (2024)

வருடம் முழுவதும் சோதனை என்று எண்ணாதே! இயற்கை இன்னல்களையும், செயற்கை இன்னல்களையும் கடந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதே சாதனை தான்!

உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களிடமே உள்ளது. மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தீர்மானியுங்கள்.

புத்தாண்டு நம் வாழ்வில் நிறைய புதிய மற்றும் அற்புதமான வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம். இந்த புத்தாண்டு நமது ஆண்டாக அமையும். 

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 
💖 
Embrace the New Year with poetic fervor through our enchanting collection of New Year kavithai (poems) in Tamil. Celebrate the spirit of new beginnings and fresh aspirations with heartfelt verses that capture the essence of hope, joy, and optimism. Dive into a world of poetic beauty that resonates with the excitement of the New Year. Explore our curated selection of New Year kavithai, perfect for sharing your warmest wishes and spreading cheer during this festive season.

16/2/21

90's Kids Kavithaigal (2021): 90ஸ் கிட்ஸ் கவிதைகள்

 

90s Kids Kavithaigal (2021)

90s Kids Kavithaigal (2021): 90ஸ் கிட்ஸ் கவிதைகள்: (கவிஞர்களின் கவிதைகள்) (Tamil Edition) Kindle Edition 

 முன்னுரை: கவிஞர் என்பவர் யார்?

இந்த உலகத்தில் இருக்க கூடிய அனைத்தையும், ரசிப்பவர்கள் கவிஞர்கள் என்கின்றேன். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

கவிதைக்கு பொருள்?

ஒரு கவிதைக்கு பொருள் அல்லது அர்த்தம் என்ன? என தேடுவது மற்றும் விவாதிப்பதும் என்னை பொறுத்தவரை தேவையற்றது ஒன்றாகும். ஒரு கவிதை படிக்கும் போது என்ன உணர்வு தோன்றுகிறதோ! அதுவே அந்த கவிதையின் பொருள் ஆகும். ஒவ்வொருவரின் எண்ணங்களும், சிந்தனைகளும் வேறுபடும் ஆகையால் கவிதைக்கு யாரும் அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஒரு ரசிகன் கவிதை எழுதும் பொழுது, அவன் எந்த சிந்தனையில் மற்றும் எவற்றையோடு ஒப்பிட்டு ரசிகின்றான் என்பது அவனுடைய அந்தரங்கம் போன்றது. ஆகையால் கவிதைக்கு பொருள் என்பது உங்கள் சிந்தனை பொறுத்து அமைகின்றன. நன்றி !

கவிதைகள் பற்றி:

இந்த புத்தகத்தில் இடம் பெற்றிக்கும் கவிதைகள் அனைத்தும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக பெற்ற கவிதைகள். முன்னதாக கூறியது போன்று ரசிப்பவன் அனைவரும் கவிஞர்களே. அப்படி ரசிக்கப்பட்ட சில கவிஞர்களின் கவிதை தொகுப்புகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். கவிதை அனுப்பிய அனைத்தும் நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி எங்களது கவிதை தொகுப்பை படிக்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகவும் நன்றி! வருக !!!

இந்த புத்தகத்தில் இருந்து பெறப்படும் ராயல்டிஸ் (பணம்) அனைத்தும் உடல் திறன் மாற்றம் கொண்ட குழந்தைகளின் காப்பகத்திற்கு சென்றடையும் என உறுதி அளிக்கின்றோன்.

என்றென்றும் ப்ரியமுடன்!
- தினேஷ் குமார் எ பி

 

1/2/21

காதல் அங்கு இருக்கிறது!

 

Sad Love Poems

நாங்கள் ஒரு இடத்தில் கூடினோம்

இப்போது இருவரும் அங்கு இல்லை

நான் இல்லாதப் பொழுது,

அவள் பார்க்கின்றாள்..

அங்கு அவள் இல்லாதப் போது நான் பார்க்கிறேன்..

ஆனால் காதல் அங்கு இருக்கிறது... 

இருவருக்கு பதிலாக..