இப்போதெல்லாம்
இதயத்தின் ஓட்டம் அடிக்கடி
தடைபெறுகிறது...
நீ இல்லை
என்பதை உணர்த்தும் - உன்
நினைவுகள் அங்கொன்றும்,
இங்கொன்றும் சுற்றி
திரிகின்றது...
நீ வந்து சேர்ந்த - முதல்
அறை எது என்று
தெரியாமல்...
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
முத்தமிடதிலில் துவங்கி...
நமது பயணத்திட்டம் ஆரம்பம்!
பயணங்கள் உன்னில்
இருந்து தொடங்குகிறது!
நமது இதழால் நகர்ந்து செல்வதெல்லாம்...
நெடுஞ்சாலை பயணமகிபோகிறது...
நாம் செல்லும் பாதையில்!
முத்தங்களின் தடையங்கள் அழித்து விடாதே!
எனக்கு ஞாபகமறதி அதிகம்!
அதனால் பயண நடுவில் நான்
அடிக்கடி வழிமாறி செல்வதுண்டு...
ஆகையால் கவனம் கொள் - இல்லையே
முதலில் இருந்தே பயணிக்க விரும்புகிறேன்!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
காதல்...!!!
கதகதப்பில் என்னை...
குளிரூட்டும் மருந்து!
உன் முத்தங்கள்...
மட்டுமே...!!!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா
எனது விழிகளில்!
ஆயிரம் கவிதைகளை!...
புதைத்து செல்கிறாள்!
அவளது அரைநொடி
பார்வையில்!!!
- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா