உனது இதழ் வாடும் என்றால்
அது எனக்கு இலை உதிர் காலம்!...
உனது இதழ் நாவினால் ஈராமனால்
அது எனக்கு மழை காலம்!...
உனது இதழ் சிலிர்க்கும் என்றால்
அது எனக்கு குளிர்காலம்!...
உனது இதழ் விரிந்து...
எனது இதழில் இணைந்தால்!...
அது எனக்கு வசந்தகாலம்!
எனது அன்னை கோவப்படும் நேரத்தில்...
அவளது தொப்புள் கொடியின் வாசலில்
நின்று பார்கிறேன் நான் குழந்தை பருவத்தில்
செய்த குறும்புகளை....
அம்மா நீ எனக்கு இப்போது குழந்தையம்மா...
உனக்காக எத்தனை கவிதை எழுதினாலும்
இந்த ஹைக்கூ கவிதை மட்டும்
நாளைக்கு அடிக்கடி சொல்ல தோன்றுகின்றது - அன்பே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று!
நாளை பூக்கள் அனைத்திற்கும் விடுமுறை
உன் பிறந்தநாள் முன்னிட்டு....ஏன்?
எத்தனை இதழ்கள் மலர்ந்தாலும்
உன் இதழில் மலரும் புன்னகைக்கு
அது ஈடுல்லை என்று....
ஏழு வர்ணங்கள் வைத்து!..
ஓவியம் வரைகின்றேன்!
எனது நாவினால் - நீ
பிகாசோ உதட்டு ஓவியம்
என்று தெரிந்தபின்பு...
இப்படிக்கு முத்தம்!
இச்சையை தீர்க்கும் எந்திரம் அல்ல பெண்கள்!
அவள் ஹைக்கூ கவிதை!
இல்லாதவன் எடுத்தால் அது திருட்டு!
அரசாங்க வேலை பார்ப்பவன் எடுத்தால் அது லஞ்சம்!
அரசியல் வாதிகள் எடுத்தால் அது ஊழல் !
ஊழல் செய்தவன் ஒளிந்து கொள்கிறான்
சட்டத்தின் ஓட்டை வழியாக!..
பசிக்கு எடுத்தவன் தொங்குகிறான்!
தூக்கு வழியாக....
இதில் யார்? திருடர்கள்!
எனது இதயத்தை
துளையிடும் அம்பு...
உன் கண்ணின் - இமை
என்று தெரியாமல்...
இரவு முழுக்க...
என்ன ஒரு கூர்மை!
எனது மீது என்னவளுக்கு கோபம்!
என்னை அனைக்கும் முன்பு!
விளக்கு முதலில் அணைக்கிறாய் என்று!