30/12/15

வசந்தகாலம்!

vasanthakala kavithai in tamil

உனது இதழ் வாடும் என்றால்
அது எனக்கு இலை உதிர் காலம்!...
உனது இதழ் நாவினால் ஈராமனால்
அது எனக்கு மழை காலம்!...
உனது இதழ் சிலிர்க்கும் என்றால்
அது எனக்கு குளிர்காலம்!...
உனது இதழ் விரிந்து...
எனது இதழில் இணைந்தால்!...
அது எனக்கு வசந்தகாலம்!

- தினேஷ் குமார் எ பி

24/12/15

நீ எனக்கு குழந்தையம்மா...

amma feeling kavithai in tamil

எனது அன்னை கோவப்படும் நேரத்தில்...
அவளது தொப்புள் கொடியின் வாசலில் 

நின்று பார்கிறேன் நான் குழந்தை பருவத்தில்
செய்த குறும்புகளை....
அம்மா நீ எனக்கு இப்போது குழந்தையம்மா...

- தினேஷ் குமார் எ பி

22/12/15

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tamil birthday kavithai husband

உனக்காக எத்தனை கவிதை எழுதினாலும்
இந்த ஹைக்கூ கவிதை மட்டும்
நாளைக்கு அடிக்கடி சொல்ல தோன்றுகின்றது - அன்பே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று!

- தினேஷ் குமார் எ பி

பிறந்தநாள் முன்னிட்டு!

Tamil birthday kavithai for lovers

நாளை பூக்கள் அனைத்திற்கும் விடுமுறை

உன் பிறந்தநாள் முன்னிட்டு....ஏன்?

எத்தனை இதழ்கள் மலர்ந்தாலும்

உன் இதழில் மலரும் புன்னகைக்கு

அது ஈடுல்லை என்று....

- தினேஷ் குமார் எ பி

 


21/12/15

பிகாசோ ஓவியம்!

Cute Romantic Kadhal Kavithaigal

ஏழு வர்ணங்கள் வைத்து!..
ஓவியம் வரைகின்றேன்!
எனது நாவினால் - நீ
பிகாசோ உதட்டு ஓவியம்
என்று தெரிந்தபின்பு...
இப்படிக்கு முத்தம்!

- தினேஷ் குமார் எ பி

ஹைக்கூ கவிதை பெண்மை!


இச்சையை தீர்க்கும் எந்திரம் அல்ல பெண்கள்

அவள் ஹைக்கூ கவிதை!

- தினேஷ் குமார் எ பி

15/12/15

திருட்டு கவிதை!

ஊழல் கவிதைகள்

இல்லாதவன் எடுத்தால் அது திருட்டு!
அரசாங்க வேலை பார்ப்பவன் எடுத்தால் அது லஞ்சம்!
அரசியல் வாதிகள் எடுத்தால் அது ஊழல் !

ஊழல் செய்தவன் ஒளிந்து கொள்கிறான்
சட்டத்தின் ஓட்டை வழியாக!..
பசிக்கு எடுத்தவன் தொங்குகிறான்!
தூக்கு வழியாக....
இதில் யார்? திருடர்கள்!

- தினேஷ் குமார் எ பி

14/12/15

நி என் விழித்திருந்த கனவுகள்!

eye tamil kavithai

எனது இதயத்தை

துளையிடும் அம்பு...

உன் கண்ணின் - இமை

என்று தெரியாமல்...

விழித்து இருந்தேன்

இரவு முழுக்க...

என்ன ஒரு கூர்மை!

உனது கண்ணிமை!

- தினேஷ் குமார்

12/12/15

என்னவளுக்கு கோபம்!


எனது மீது என்னவளுக்கு கோபம்!
என்னை அனைக்கும் முன்பு!
விளக்கு முதலில் அணைக்கிறாய் என்று!

- தினேஷ் குமார்

27/11/15

என் அன்பு காதலியே!

True love kavithai tamil

நேற்று தான் அழகானது இந்த நிலவு உன்னை போல!
நிலவு தன்னை அழகுப்படுத்திக்கொள்ள...
இத்தனை ஆண்டுகள் ஆகின அடடா!
உன்னை பின் தொடர்ந்து வந்தது
உனக்கு தெரியவிலையே!
அழகிய நிலவே!

என் அன்பு காதலியே!

  - தினேஷ் குமார்

24/11/15

வாழ்க்கை பூக்கள்!

tamil love kavithai flowers

வாழ்க்கை பூக்கள் மாதிரி - யார்
அதிகம் ரசிகின்றனரோ - அவர்களுக்கே
அதிகம் கிடைக்கின்றது இன்பமான தேன்!

  - தினேஷ் குமார்

12/10/15

கடவுள் ஒன்று இருந்தால்!

love feel kavithai tamil

கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்...
எனக்கு! நீண்ட ஆயுள் வேண்டுமேன அல்ல...
நீ மட்டும் வேண்டுமேன... கடவுள் ஒன்று இருந்தால்!

                                                                                                             - தினேஷ் குமார் எ பி

11/9/15

காதலி ஒரு குழந்தை!

உன்னை நினைத்து உறங்காத நாளில்
எனது - கனவுகளின் வழியாக...
எட்டி உதைக்கிறாய் ஒரு குழந்தையைப்போல்!

                                                                                   - தினேஷ் குமார் எ பி

14/8/15

இந்தியன் என்ற பெருமை எனக்கும் உண்டு!

independence day kavithai in tamil

அகிம்சை என்னும் தோட்டத்தில்
சுதந்திரம் என்னும் பூக்கள் பூக்க
மண்ணாகி போனிர்களோ
இத்தோட்டத்தினை {தேசம்} காக்க...
என் நாட்டு தியாகிகளே!

- தினேஷ் குமார் எ பி

31/7/15

அக்னி சிறகுகள்

abdul kalam kavithai

உன் சரிதம்: இம்மண்ணுலகில் சென்றாலும்...
உன் புகழ் விண்ணுலகம் பாடும்!
விதை ஒன்று புதைந்தது இன்று...
நாளை வெளி வரும் பல இளம் கன்று!

- தினேஷ் குமார் எ பி

30/7/15

அது ஒரு அப்துல் கலாம் {கலாம்)


abdul kalam tamil kavithai

இம்மண்ணுலக காந்த சக்தியே...
மாணவர்களின் ஊந்து சக்தியே...
ஒரு கண்டுபிடிப்பின் தாய்? தேவை!
தேவைகள் அனைத்தும் தந்ததால்...

நீ தெய்வத்திடம் சென்றாயோ? என் தெய்வமே!

- தினேஷ் குமார் எ பி

4/7/15

உன்முகம் தொடுகிறேன்

tamil kadhal kavithai

கண்ணை மூடி
எனது கைகளை நீட்டுகிறேன்!
தொட்ட இடமெல்லம்
என் காதலியின் முகம் அட டா...

15/6/15

விவசாயி இடம் விற்பனைக்கு

 இடம் விற்பனைக்கு விவசாயி

இம்மண்ணில் நெற்கதிர் நட்டேன்,
காய் ,கனிகளை பயிரிட்டேன்,
பருப்பு சாகுபடி செய்தேன்,
கம்பு, வேர்கடலை விளைவித்தேன்,
விற்கவில்லை!
ஆனால் கல் தான் நட்டேன்...
இடம் விற்பனைக்கு என
விற்றுவிட்டது!
இப்படிக்கு வருத்ததுடன் விவசாயி...

தினேஷ் குமார் எ பி

1.  ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.  ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.  ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.  ஒரு ஏக்கரை பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

10/6/15

என் நண்பன்!

birthday kavithai friend in tamil

ஈவுலகில் நான் இருந்தாலும் இல்லை என்றாலும்
எனது தாய்க்கு இன்னொரு மகன் இருப்பன் அவன் என் நண்பன்!

தினேஷ் குமார் எ பி

28/5/15

கண்ணில் பட்ட கவிதை

kan patriya kavithai

கண்ணில் பட்டவை அனைத்தும் காட்சிபடுதுகிறேன்!
ஏன் கைபேசியின் வழியாக...
காட்சிப்படுதுவதை கவிதையாகின்றன.
ஏன் கற்பனை வழியாக...
என் கற்பனைகளை அனுப்பிவிட்டேன் கவிதையாக...
இதோ இணைத்துள்ளேன் எனது காதலை....
இணைய வழியாக...

தினேஷ் குமார் எ பி

30/4/15

கண்ணில் விழுந்தவன் என் காதலன்

kadhalan tamil kavithaigal

நி பார்க்கும் பார்வையில் ஆயிரம்
கவிதை வீசி செல்கிறாய் என்மேல்!

உனது விழியின் வழியாக
அதிலிருந்து எடுத்துப்படித்தேன் ஒன்று...
அந்த கவிதை - என்
கண்ணில் விழுந்தவன் 

என் காதலன் நீதானட...

தினேஷ் குமார் எ பி

11/4/15

முத்தம் தரும் தருணம்!

நான் முத்தம் தரும் தருணம்!
நீ போடா என்கையில்...
ஏன் பக்கம் வாட என்று கேட்கிறது எனது காதில்!

தினேஷ் குமார் எ பி

27/3/15

உனது புன்னகையில் அழகு

tamil kavithai amma

ஒரு தாய்மையின் பூரிப்பு!
உனது புன்னகையில் எத்தனை இனிமை காண்கிறேன்...
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ? அமுதே!
உன் அன்பு கலந்த சிரிப்பில் நான் அடிமையாகிறேன்...
நான் எழுதித்தருகிறேன் அடிமை - சாசனம்
அன்பு கலந்த முத்ததில்...

தினேஷ் குமார் எ பி

18/3/15

உனது சிரிப்பில் சிந்திய கவிதை!

எனது விரல்களில் வழியும் கவிதை - நீ
வழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீ
காலை விடியலில் குட்டி கனவுகள் - நீ
எனது கனவுகள் எல்லாம் - நீ
குழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீ
மலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீ
மண்ணில் விழும் மழைத்துளி - நீ
விழுந்த மழைதுளி அனைத்திலும் - நீ
காற்றில் ஏழும் சுவாசம் - நீ
உன் சுவாசத்தில் உயிர் வாழும் ஜீவன் நான்!

தினேஷ் குமார் எ பி

6/3/15

சந்தேகம் எனது கவிதைக்கு

என்னவள் சந்தேகம் ஏன்?
பெண்கள் கவிதை எழுத விரும்புவதில்லை என்று ?
நான் கேட்டேன் கவிதைகள்
அனைத்தும் தன்னை பற்றி எப்படி எழுதும் என்று ?
என்னவள் கவிதை சிரித்தால்
எதுகை முனை இலக்கிய தமிழில்!


13/2/15

பெண்களின் உதடுகள் சிவப்பு

beautiful lips poem

பெண்களின் உதடுகள் சிவக்க வேண்டும்!
சயாங்களில் அல்ல ஆண்கள் தரும் சந்தோஷத்தில்...

24/1/15

அன்பு முத்தம்

பழச்சாற உனது உதடுகள் ?
பனித்துளி முத்தம் தருகிறாய் - அன்பே!
உன்மேல் படர்ந்தவுடன்.

1/1/15

இனிப்பான கண்ணிர் இந்த காதல்

kanneer desam kavithai in tamil

நான் தனிமையில் அழும்போது
என் கண்ணிர் உப்பகின்றன... அதுவே!
உன்னை நினைத்து உருக்கும் பொழுது!
அந்த கண்ணீரும் இனிக்கின்றன
உன்னைப்போலவே!
எனது உதட்டில் பட்டவுடன்....