26/2/14
இதயத்தின் ஓசை காதல்
விடியும் முன்னே சூரியன் வந்து கலைத்து விடுமா!
என் கனவின் உயிரை அதோ சூரியன் வரும் முன் உன் நினைவுகளால் நீயே என்னை கொன்று விட்டாய் உயிர் காதலியே!
A P Dinesh Kumar
25/2/14
பார்க்க நினைப்பது கண்கள்
இமைக்கின்ற கண்கள் பார்ப்பதுபலரை என்றாலும்பார்க்க நினைப்பதுஉன்னை மட்டும்தான்...துடிக்கிற இதயம்எனக்குள் இருந்தாலும்அது உனக்காக மட்டும்தான்துடிக்கிறது...
இமைக்கின்ற கண்கள் பார்ப்பது
பலரை என்றாலும்
பார்க்க நினைப்பது
உன்னை மட்டும்தான்...
துடிக்கிற இதயம்
எனக்குள் இருந்தாலும்
அது உனக்காக மட்டும்தான்
துடிக்கிறது...
24/2/14
காதலர் தினம்
எத்தனை ஆண்டு காதலர் தினம்
கடந்து போனாலும்...நம் காதல்
பரிமாற்றம் செய்த - அந்த நாட்கள் தான்
நம் இருவருக்கும் காதலர் தினம்!
A P Dinesh Kumar
18/2/14
எனது கவிதைக்கு பரிசு
என்னோட கவிதை டாப் 20 காதல் கவிதையாக ரேடியோ சிட்டி 91.1 பண்பலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை நான் மிக மகிழ்ச்சியுடன் தெருவிக்கிறேன்.நன்றி!
கவிதை தலைப்பு : குடைபிடித்து செல்லாதே!
எனது - உயிர் பிரிந்து
சென்ற பிறகும்...
காற்றாக கலந்து
மேகத்தில் உறைந்து
கண்ணீர் என்னும் பெயரில்
மழையாக விழுவேன்!
உனது
இதயத்தில் இடம் பிடிக்க
குடைபிடித்து செல்லாதே!
கவிதை தலைப்பு : காதல் நெறிசல்!
உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று !
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு நெறிசல்
இப்போதெல்லாம்
பச்சை விளக்கு விழுந்த பின்பும்
கால்களில் பயணம் தடை பெறுகின்றன!
நீ இல்லாத இந்த சாலையில்!...
கவிதை தலைப்பு : காதல் காயங்கள்!
உன்னை காயப்படுத்துவது
என் கண்ணிருக்கு
கூட விருப்பம் இல்லையாம்.
அதனால் - என்னவோ
உன்னை பாத்ததும்
ஒளிந்து கொள்கின்றன.
கண்ணீர் சில காயங்கள்...
14/2/14
காதலர் தினம் கவிதை - வண்ணமே!
7/2/14
காதலர் தினம் கவிதைகள் - காதல் சுவை
இத்தனை சுவையான பழங்களை!
நான் சுவைத்தது இல்லை - அன்பே!
இப்போது சுவைக்கிறேன்!
உன் கன்னத்தின் தோலுறித்து!
- AP Dinesh Kumar