தெரு விளக்கு அணைந்த படியே நிலவு ஊர்வலம் !
ஒற்றை மெழுகு வெளிச்சத்தில் ஓவிய கண்காட்சி !
என்னவள் முகம்...!
உருகியது மெழுகு மட்டும் அல்ல !
நானும் தான் அன்பே...
தீயில் இட்டு என்னை எரித்தாலும்....
குளிர்ந்த நிலவொளியும், தென்றல் காற்றும் நிறைந்த
நதிகரையில் நிற்பதாக உணர்கிறேன்....
வெட்கம் கலந்த புன்னகையுடன் உன் பூமுகத்தை...
பார்க்கும் நிமிடங்களில்....
...