12/12/12

என் நட்புக்கு சமர்ப்பணம்...


friendship-kavithai-photo

என்னை விட்டு நீ செல்வதை காணும் பொழுது என் கண்கள் கலங்குகிறது...
என்னை நானே பல ஆயிரம் முறை கேட்டேன் எப்படி?
நான் உன்னை இழந்தேன் என...
என் கண்ணீர் வற்றி போனதன் காரணம் என்ன என்று...
முதல் முறை என்னிடம் ,பதில் ஏதும் இல்லை...
நான் என் நினைவுகளோடு ஒன்றிய பொழுது...
நீ என்னை பிரிந்து சென்றதை மட்டும் காண முடிகிறது...
உன்னை பிரிய மனம் இல்லை..
இருப்பினும் இதயத்தில் வலியுடன் உனக்காக பிரிகிறேன்...
என்னிடம் குழப்பம் எதுவும் இல்லை...
ஆனால் இதயம் அதிர்ச்சியால் கனத்து போனது..
என் உலகமே தலை கீழாக விழுந்தது போல் உணர்தேன்..
இதயம் கனத்து போனதால் வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது...
என் உயிர் முச்சை உபயோகித்து வெளி கொணர்தேன். அந்த சில வார்த்தைகளை
என்னை விட்டு பிரியாதே...என !....
என்றும் உன் நட்புடன்....

17/10/12

காதலிக்க போகிறேன்

Love-Failure-Kavithai
காதலே உன்னை காதலிக்கிறேன்…….
நான் காதலிக்கிறேன், காதலிக்க போகிறேன் ,என்பதற்கு அல்ல...
முதுமையில் ஏற்படும் புரிந்துணர்வு காதலை
பார்த்து ரசித்ததனால்...

5/10/12

கவிதை எழுத

love tamil kavithai

பார்க்கும் போதெல்லாம் கவிதை எழுத தோணுதடி
உன் இதழ் வரிகளில் மட்டும் .

இப்படிக்கு முட்கள் !

21/9/12

இதய துடிப்பின் தாலாட்டு!

amma kavithai

நான் தூங்காமல் அழுத நாட்களில்,

என் தாய் இடது புறத்தோளில் சாய்த்து தூங்க வைப்பாள் !

நானும் உடனே தூங்கி விடுவேன்,

அதற்கு காரணம் அவளுடைய இதய துடிப்பு !

- தினேஷ் குமார் எ பி

20/9/12

வலிகளுடன் முட்கள் !


Kavithaigal In Tamil About Love

முட்களுக்கும் வலிகள் உண்டு  உயிரே !
நி மிதிக்காமல் போன அந்த நாட்களில்... மட்டும் !

17/9/12

கவிதை தோற்றனவோ!

Tamil-Kavithaigal-About-Love
 என் கவிதையில் உள்ள வரிகள் உன்னிடம் தோற்றனவோ! அன்பே..
 உன் இதழ்களில் உள்ள வரிகளை படித்த பின்பு !

16/8/12

கவிதையின் எதிர்பார்ப்பு

Amma Kavithai
நீ கருவில் பூத்த இதயம்...
உன்னை  எதிரில்
பார்த்த நாட்களை விட,
உன்னை எதிர் பார்த்த
நாட்கள் தான் அதிகம்!
அன்பே!
- அன்புள்ள அம்மா!...

13/8/12

கவிதைக்கு ஒரு சுகந்திரம்

independence day

சில்லென்ற காற்று!..
நம்மை சிலிர்க்க வைக்கும் காற்று!..
அலையடித்து மோதும் காற்று!..
அதுவே நாம் சுவாசிக்கிற,
ஆனந்த சுதந்திர காற்று!...
- ஜெய் ஹிந்த் !...

கவிதைக்கு ஒரு முத்தம்

Tamil Kavithai Love

இருமனம் சுமந்து

இதழ்கள் பெற்ற ''குழந்தை''

காதலர்களின் ''முத்தம்''

10/8/12

காதல் தோஷம்

Tamil Kadhal

கண்கள் ஓய்வு பெரும் நேரத்தில்!
''கனவுகள் '' மட்டும்
உயிர் பெற்று வாழ்வது... காதல்
பலருக்கு ''சந்(தோஷம்)''...


3/8/12

காதல் கனவுகள்

Tamil Kavithaigal About Love

காட்டு மூங்கில் எரிகின்றன, புல்லாங்குழலை தேடி.....

புல்லாங்குழல்கள் அழுகின்றன காப்பாற்று என ! ''வெப்பத்திடம் ''

''வெப்பம்'' நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீ நினைக்கிறாய் 'அன்பே' !

நான் சொல்லாமலே உனக்கு தெரியும், அப்புறம் எதற்கு கேட்கிறாய் ?

''இப்படிக்கு'' காதல் கனவுகள் ! வெப்பம் குறையாமலே...

25/7/12

விழிகளின் அழைப்பிதழ்

Tamil Love Kavithai

விழிகளின் அழைப்பிதழ் அது காதலின் கடிதம்,

கடிதம் படிக்கும் முன்  என் விழிகள் மட்டும் நீண்ட உறக்கத்தில் அதிகாலை  விடிந்த பின்னும் !

கரு மேகம் கருக்கவில்லை, புயல் காற்று வீச வில்லை, 

மழைச்சாரல் தூவவில்லை, கண்ணீர் மட்டும் வருகின்றதடி உன்னை  காணாத நாட்களில் மட்டும்!

தண்ணீரின் விதைகள் மழைச்சாரல்களாக

கரைக்கடந்து ஓடுதடி காதல் வெறும் ''கண்ணீரில்'' 

சில்லென்ற காற்று விசும்போதொல்லாம் உனது விழிகள் அழைத்த தடி

என்னை காதலி என்று!

இனி காலம் முடிந்தாலும் கடைசி வரை கூட இருப்பேன் என்று  கடைக்கண் சொன்னது காளையரிடம் ! காதல்...


18/7/12

கடற்கரை காதல்

Tamil Love Kavithaigal

கடற்கரை தாகம் காதலர்களின்  வருகை..
கடற்கரை ஓரம் கண்டடுக்கப்பட்ட முத்து  காதல்!
கவிழ்ந்த படகில்  நீண்ட பயணம் காதலர்கள்  மட்டும்!...
பயணம் முடிந்த  பின் முத்த பரிசு இருவருக்கு  மட்டும்!.

Dinesh Kumar A P

 

12/7/12

உனது விழிகள்....

Pirivu Kavithai

நிழல் படாத நிலவுடைய உன் கண்களை
இமைத்திரையில் மூடிக்கொள் ! அன்பே!
வெயில் படாத என் இதயத்தில்,
வெப்பக் காற்று வீசியது,விடை பெற சொல்லி!
விருப்பம் இல்லாமல் சொன்னது...உனது விழிகள்....

10/7/12

திருந்திய வேடன்


உலகம் என்னும் காட்டுக்குள் மிருகங்கள் வேடம் இடுகின்றன...

மனிதர்களாக !

                                                                                                     -திருந்திய வேடன்...

9/7/12

காதல் கைதி !

Love Kavithaigal In Tamil

பிரிவு  என்னும் நாட்களை

தூக்கிலிடும் வரை !

உண்மையாக காதலிப்பவர்கள்

அனைவரும் குற்றவாளிகள் தான் !

                                                                                                                            இப்படிக்கு

                                                                                                                            காதல் கைதி !

3/7/12

தோல்வி மழை துளி போன்றது

Thanampikkai-kavithaigal-tamil

மண்ணில் விழுந்த சில மழை
 துளிகள் மறைந்து விடுகின்றன!
ஆனால் அதற்கு தெரிவதில்லை
நாம் விழவில்லை,
பல உயிர்களை நம்மால் 
விதைக்க படுகின்றன என்று!

A P Dinesh Kumar

28/6/12

தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி

Tamil Kavithaikal

முயற்சிக்கு கிடைத்த வெற்றி,தோல்விகளின் அனுபவங்கள் !
தோல்விக்கு கிடைத்த வெற்றி,அனுபவங்களின் தழும்புகள் !
"தழும்புகளுக்கு கிடைத்த வெற்றி",வெற்றியின் இனிய நினைவுகள் !

15/6/12

நிலவும் அழகு தான்

Love Failure Kavithai

தொலைவில் இருக்கும் நிலவும் அழகு தான்! ஒப்புகொள்கிறேன்....

ஆனால் உன்னை விட அல்ல! அன்பே.....

1/6/12

உயீர் எழுத்துகள் அம்மா...

hikoo-kavithai 

உயீர் எழுத்துகள்

 எத்தனை என்று கேட்டார்கள் ! என் ஆசிரியர்
சட்ரன்று  சொன்னேன் மூன்று  ! என ...

அதற்கு காரணம் என்  {அம்மா }....