6/2/14

காதலர் தினம் கவிதை - கூந்தல் வாசம்!

tamil kadhal kavithaigal photos

காதலா - உன் கைகளில்
இத்தனை வசமா ? எப்படி வந்தது ?
கொஞ்சம் முகர்ந்து தான் பாரே!
பூக்களை மட்டும்! கூந்தலை அல்ல!
- A P Dinesh Kumar

3/2/14

காதல் கண்ணாமுச்சி

tamil romantic poems Potos

என்னவள்! பொட்டு வைத்த கன்னியவள்!
கண்களில் மாட்டித்தவிக்கும் காளை நான்!
என் நெஞ்சம் தவித்து,
மஞ்சத்தில் தழைத்ததோ என் காதல்?
கண்ணை கட்டி கொள்ளாமல் 
கண்ணாமுச்சி ஆடுகின்றன
இவளது காதல்!

29/1/14

காதல் பயணங்களில் முத்தம்

tamil kavithai kiss love poems

தூரப்படுகின்றன - இதயத்தின்
நெருக்கத்தை அதிகரிக்க!
இணையாத தண்டவாளம்
இனைகின்றன இரு - விழி
காதல் பயணங்களில்!...
பயணத்தின் போது
விபத்துகள் ஏற்படுகின்றன
விழிகள் மூடி முத்தம் இடுகையில்!
-  AP Dinesh Kumar

3/1/14

நீ எனக்கு வேண்டும்

Images for tamil sad kavithai

நாம் என்ன? தவறு செய்தோம்!
என்று தெரியவில்லை? தண்டனை - மட்டும்
பெறுகிறோம் பேசாமலே - எத்தனை
துன்பங்கள் வந்தாலும்...
பிரிய மாட்டேன் - நீ
எனக்கு வேண்டும் {ட} - என்று
சொல்லும் போதும் கலங்குகின்றன
கண்கள் மட்டும்.
-  AP Dinesh Kumar

31/12/13

காதல் வேண்டாம்

love failure tamil kavithai

பனித்துளியும் மழைத்துளியும் மறுபடியும் பிறப்பதில்லை... 
அதுபோல ஏன் காதல் எப்போதும் - இம்மண்ணில் இறப்பதில்லை...
ஒரு வார்த்தை நீ கூறிவிட்டால் உயிர் வாழ்வேன்...
இல்லையென்றால் உயிர் தந்து ஏன் காதலுக்கு பரிசு அளிப்பேன்...
காகிதத்தில் விழுந்த கண்ணீரும்
ஏன் காதல் கதையை தழுவி வாழும்
கடைக்கண் விசி காதலை சொன்னது - நீ
இன்று கை காட்டி சொல்லுகிறாய் - நீ
வேண்டாம் என்று...
-  AP Dinesh Kumar

19/12/13

நிலவான உன்னை பார்கிறேன்

kanavan manaivi kathal kavithaigal

பகலில் உன்னை பார்கிறேன்
இரவில் நிலவை பார்கிறேன்
இரண்டும் ஒன்று தான் - ஆனால்
நி பார்க்க கூடாது என்று சொல்கிறாய்
நிலவான உன்னை
அதனால் தான் என்னவோ?
கண்ணை கட்டி கொண்டது எனது காதல்!

-  AP Dinesh Kumar
விளக்கம் சிறுகதை : 

காதலன் தனது காதலியை பகல் முழுக்க நேரில் பார்க்கிறான் ...
இரவில் அவளது முகத்தை நிலவில் பார்க்கிறான்....
காதலி தனது காதலனிடம் .... என்னை பார்க்காதே என்று சொன்னதுக்கு காதலனுக்கு வருத்தம் ...இவன் வருத்தத்தை பார்க்க முடியாத அவனது அன்பு ...கண்மூடி கொண்டதாம் அவனது காதல்.....

காதல் மறதி

overs day kavithai in tamil

எத்தனை முறை
நான் மனப்பாடம்
செய்தாலும் மறந்து
விடுகிறேன் உன்னை தவிர....
மற்றவை எல்லாவற்றையும்....
-  AP Dinesh Kumar

4/12/13

பசுமையான காதல்

kavithai love sad lovers

நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!....
-  AP Dinesh Kumar

விளக்கம் சிறுகதை : ஒரு பையன் தனது காதலை தன்னால முடிஞ்ச அளவுக்கு அவனது காதலிடம் அன்பை வெளிப்படுத்துகிறான்... அது எப்படின ? அவள் மரமாக அசையமல் நிற்கிறாள்... தனது அன்பை  இடி, மின்னல்,மழை காற்றயாகவும், வெளிபடுதுகிறான் ஆனால்...அவள் செவி சாய்க்காமல் நிற்கிறாள்....அந்த பையன் இருக்கட்டும் பெண்ணே !.. நி மரமாக இரு...உன்னை வாழ வைக்கிறேன்...உன்னை சுத்திக்கொண்டு.....பச்சிளம் பாசியாக....
எல்லாரும் மரத்தால் தான் பச்சிளம் பாசியை வாழ வைத்துகொண்டு இருக்கறதுன்னு நினைப்பது ...தவறு...
உண்மை அது இல்லை....தன்னை அழித்து கொண்டு ஈரத்தை தந்து மரத்தை வாழ வைப்பது பாசி தான்...எனது காதலை போல!...

11/11/13

தவறாக நினைக்காதே!

sweet tamil kadhal kavithaigal

உன்னை அல்ல..

உன்னோடு சண்டையிட்ட - அந்த

நிமிடத்தை...மன்னிப்பது! ...

மன்னிக்காமல் இருப்பதும்

4/11/13

காதலில் தவறுகள்

tamil love failure kavithai

காயங்கள் மட்டும் தருகிறாய்
கண்ணீரின் வருத்தம்
நி செய்த தவறுக்கு கூட
தெரிந்த எனக்கு?
நான் செய்யாத
தவறுக்கு தண்டனை பெறுகிறேன்
உன்னிடமிருந்து ஒரு நாள் விலகி ..

24/10/13

கண்ணீர் சில காயங்கள்!

Love kavithai new

உன்னை காயப்படுத்துவது

கூட விருப்பம் இல்லையாம்.

அதனால் - என்னவோ

உன்னை பாத்ததும் - இமைனுள்

ஒளிந்து கொள்கின்றன.

கண்ணீர் சில காயங்கள்!

- தினேஷ் குமார் எ பி

Indulge in the poignant world of emotions with our collection of love-sad kavithai in Tamil. Dive into heart-wrenching verses and soul-stirring expressions that capture the essence of love and sadness. Explore the depth of Tamil poetry as we bring you a curated selection of love sad kavithai that resonates with the melancholy of unrequited love and lost romance. Immerse yourself in the beauty of the Tamil language and the raw emotions depicted in our love sad kavithai collection.

23/10/13

காதல் போர் !

war love poems

காதலில்...
நன் போர்
தொடுக்கும் முன்பே!
அவள் கண்
அம்பை எய்த்து
சாய்த்து விட்டாள்...
என்னவள் மிகச்சிறந்த
போராளி தான்!
இந்த போர் முரண் பாடுடையது!

10/10/13

அன்பு முத்தம்!

love pain tamil kavithai

கோடைக்காலங்களிலும்
குளிர்ந்து காணப்படுகின்றன
ரோஜா இதழ் - காற்றில்
கலந்த நமது முத்தங்கள்
இதயம் வந்து சேர்ந்தன 
அலைபேசி வாயிலாக!


7/10/13

என்னவள் இசை

Idhaya Veenai Photos

அன்பே!

விணை தன்னை

மாய்த்து கொள்கிறது - நீ

எழுப்பும் இசைகேட்டு

வாசிப்பதை கொஞ்சம்

நிறுத்திக் கொள் - வாழ்ந்து

போகட்டும் இந்த விணை!

- தினேஷ் குமார் எ பி

23/9/13

ரோஜா இதழே!

roja kavithai in tamil

சிறு குழப்பம் - இந்த
எந்த இதழுக்கு
முத்தம் தருவதன்று ?

22/9/13

எனது பாடல் வரிகள் உனது பெயர்

tamil puthu kavithai kadhal

எனது இதழ்
முனு-முனுக்கும்
பாடலில்...
உள்ள வரிகள்
மறந்து போனால்
உனது பெயரை கோர்க்கிறேன்!
அந்த பாடல்களும்
அழகாகின்றன உன்னைப்போல்... 

15/9/13

வெட்கம் கலந்த புன்னகை

tamil kavithai about love failure

தினம் தினம் உன்னிடத்தில்
வெட்கத்தை காணும்
 என்னுள் சிதறும் புன்னகை
 சிந்தித்து கொண்டே சொல்கிறது ...
வெட்கப்படும் ஆண்கள்
வெட்கப்பட்டே வெட்கத்தை
அழகக்காக்குகிறார்கள்
உன்னை போல...
நன்றி 
-தோழி சக்தி

13/9/13

குடைபிடித்து செல்லாதே!

mazhai tamil kavithai 

எனது - உயிர் பிரிந்து

சென்ற பிறகும்...

காற்றாக கலந்து

மேகத்தில் உறைந்து

கண்ணீர் என்னும் பெயரில்

மழையாக விழுவேன்!

உனது

இதயத்தில் இடம் பிடிக்க

குடைபிடித்து செல்லாதே!

7/9/13

திருடிய இதயம்

super hit tamil kavithai

களவும் - காதலும்
ஒன்று தான்-இரண்டும்
தெரியாமலே! 
திருடினாலும் மட்டுமே!
முழுமை பெறுகின்றன
நீ திருடியது போல்...!


5/9/13

உனது காதல் நினைவுகள்

love failure tamil kavithai

மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு
தான் தெரியும்.

நீ காதலிப்பது
எனக்கு மட்டும்
தான் புரியும்
உனது காதல்
நினைவுகளை சுமக்கும்
தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்...