19/12/13

காதல் மறதி

overs day kavithai in tamil

எத்தனை முறை
நான் மனப்பாடம்
செய்தாலும் மறந்து
விடுகிறேன் உன்னை தவிர....
மற்றவை எல்லாவற்றையும்....
-  AP Dinesh Kumar

4/12/13

பசுமையான காதல்

kavithai love sad lovers

நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!....
-  AP Dinesh Kumar

விளக்கம் சிறுகதை : ஒரு பையன் தனது காதலை தன்னால முடிஞ்ச அளவுக்கு அவனது காதலிடம் அன்பை வெளிப்படுத்துகிறான்... அது எப்படின ? அவள் மரமாக அசையமல் நிற்கிறாள்... தனது அன்பை  இடி, மின்னல்,மழை காற்றயாகவும், வெளிபடுதுகிறான் ஆனால்...அவள் செவி சாய்க்காமல் நிற்கிறாள்....அந்த பையன் இருக்கட்டும் பெண்ணே !.. நி மரமாக இரு...உன்னை வாழ வைக்கிறேன்...உன்னை சுத்திக்கொண்டு.....பச்சிளம் பாசியாக....
எல்லாரும் மரத்தால் தான் பச்சிளம் பாசியை வாழ வைத்துகொண்டு இருக்கறதுன்னு நினைப்பது ...தவறு...
உண்மை அது இல்லை....தன்னை அழித்து கொண்டு ஈரத்தை தந்து மரத்தை வாழ வைப்பது பாசி தான்...எனது காதலை போல!...

11/11/13

தவறாக நினைக்காதே!

sweet tamil kadhal kavithaigal

உன்னை அல்ல..

உன்னோடு சண்டையிட்ட - அந்த

நிமிடத்தை...மன்னிப்பது! ...

மன்னிக்காமல் இருப்பதும்

4/11/13

காதலில் தவறுகள்

tamil love failure kavithai

காயங்கள் மட்டும் தருகிறாய்
கண்ணீரின் வருத்தம்
நி செய்த தவறுக்கு கூட
தெரிந்த எனக்கு?
நான் செய்யாத
தவறுக்கு தண்டனை பெறுகிறேன்
உன்னிடமிருந்து ஒரு நாள் விலகி ..

24/10/13

கண்ணீர் சில காயங்கள்!

Love kavithai new

உன்னை காயப்படுத்துவது

கூட விருப்பம் இல்லையாம்.

அதனால் - என்னவோ

உன்னை பாத்ததும் - இமைனுள்

ஒளிந்து கொள்கின்றன.

கண்ணீர் சில காயங்கள்!

- தினேஷ் குமார் எ பி

Indulge in the poignant world of emotions with our collection of love-sad kavithai in Tamil. Dive into heart-wrenching verses and soul-stirring expressions that capture the essence of love and sadness. Explore the depth of Tamil poetry as we bring you a curated selection of love sad kavithai that resonates with the melancholy of unrequited love and lost romance. Immerse yourself in the beauty of the Tamil language and the raw emotions depicted in our love sad kavithai collection.

23/10/13

காதல் போர் !

war love poems

காதலில்...
நன் போர்
தொடுக்கும் முன்பே!
அவள் கண்
அம்பை எய்த்து
சாய்த்து விட்டாள்...
என்னவள் மிகச்சிறந்த
போராளி தான்!
இந்த போர் முரண் பாடுடையது!

10/10/13

அன்பு முத்தம்!

love pain tamil kavithai

கோடைக்காலங்களிலும்
குளிர்ந்து காணப்படுகின்றன
ரோஜா இதழ் - காற்றில்
கலந்த நமது முத்தங்கள்
இதயம் வந்து சேர்ந்தன 
அலைபேசி வாயிலாக!


7/10/13

என்னவள் இசை

Idhaya Veenai Photos

அன்பே!

விணை தன்னை

மாய்த்து கொள்கிறது - நீ

எழுப்பும் இசைகேட்டு

வாசிப்பதை கொஞ்சம்

நிறுத்திக் கொள் - வாழ்ந்து

போகட்டும் இந்த விணை!

- தினேஷ் குமார் எ பி

23/9/13

ரோஜா இதழே!

roja kavithai in tamil

சிறு குழப்பம் - இந்த
எந்த இதழுக்கு
முத்தம் தருவதன்று ?

22/9/13

எனது பாடல் வரிகள் உனது பெயர்

tamil puthu kavithai kadhal

எனது இதழ்
முனு-முனுக்கும்
பாடலில்...
உள்ள வரிகள்
மறந்து போனால்
உனது பெயரை கோர்க்கிறேன்!
அந்த பாடல்களும்
அழகாகின்றன உன்னைப்போல்... 

15/9/13

வெட்கம் கலந்த புன்னகை

tamil kavithai about love failure

தினம் தினம் உன்னிடத்தில்
வெட்கத்தை காணும்
 என்னுள் சிதறும் புன்னகை
 சிந்தித்து கொண்டே சொல்கிறது ...
வெட்கப்படும் ஆண்கள்
வெட்கப்பட்டே வெட்கத்தை
அழகக்காக்குகிறார்கள்
உன்னை போல...
நன்றி 
-தோழி சக்தி

13/9/13

குடைபிடித்து செல்லாதே!

mazhai tamil kavithai 

எனது - உயிர் பிரிந்து

சென்ற பிறகும்...

காற்றாக கலந்து

மேகத்தில் உறைந்து

கண்ணீர் என்னும் பெயரில்

மழையாக விழுவேன்!

உனது

இதயத்தில் இடம் பிடிக்க

குடைபிடித்து செல்லாதே!

7/9/13

திருடிய இதயம்

super hit tamil kavithai

களவும் - காதலும்
ஒன்று தான்-இரண்டும்
தெரியாமலே! 
திருடினாலும் மட்டுமே!
முழுமை பெறுகின்றன
நீ திருடியது போல்...!


5/9/13

உனது காதல் நினைவுகள்

love failure tamil kavithai

மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு
தான் தெரியும்.

நீ காதலிப்பது
எனக்கு மட்டும்
தான் புரியும்
உனது காதல்
நினைவுகளை சுமக்கும்
தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்...

30/8/13

நீ அழகான அன்னம்

tamil kavithai love photos

போகும்
பாதையில்
அன்னப் பறவைகள்
உன்னை பின்
தொடர்கின்றன.
ஏன் என்பது
மட்டும் தான்
தெரியும் நீ அழகான
அன்னம் என்று.

22/8/13

காதல் அடிமை

tamil hikoo kadhal kavithaigal

அடையாளம் தெரியாத எனது அன்பும்!
ஆறுதல் பெறுகின்றன.
உன்னிடம் மட்டும்!
காதல் அடிமைகளாக…


19/8/13

உறக்கம் இல்லை

tamil kavithai love failure

என்னிடம் விழிப்புகள்
இடம் பெறுகின்றன
நீ இல்லாத இந்த நாளில்!
இருள் இல்லாத  
இந்த இரவில்
உறக்கம் மட்டும் எப்படி?
அன்பே !அந்நாளில்
மயான அமைதி
மனதுக்குள் தோன்றின!
ஒருவேளை  உன்னை
மறந்துருக்க கூடுமோ?
அல்லது நான் மடிந்துருக்க கூடுமோ?

15/8/13

காதல் முத்துக்கள்

true love sms in tamil

முத்துக்கள்!
உதிருமென தெரிந்தும்.
உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்!
உனது காலில்
இசை எழுப்பும்

13/8/13

காதல் அணுக்கள்

tamil love failure kavithai images

என் இரத்தத்தில்
 காதல் அணுக்கள்
 வெற்றி பெருகின்றன!
சிவப்பு,வெள்ளைஅணுகளிடம்!
அடடா? இது தான்!
சாக அடிப்பதோ காதலில் ! மட்டும்...


10/8/13

பார்க்காமல் இருந்தால்

tamil love kavithai images

என்னிடம் எதிர்ப்பு சக்தி 

குறைந்து கொண்டே போகின்றது...

நான் எதிர் பார்த்த நாளில்!

உன்னை எதிரில்;

பார்க்காமல் போனத்தால் என்னவோ?