21/3/20

எப்படி தடுப்பேன்

rain kavithai in tamil images
Rain kavithai in Tamil images

கொட்டும் மழைதனை குடைவிரித்து

எப்படி தடுப்பேன்

என் கன்னக்கதுப்புகளை முத்தமிட்டு

கொஞ்சிக் கொண்டு வழிந்தோடுகையில்

நிலத்தில் விழும் சடசடப்பு ஓசைகளை

எவ்வாறு தடுப்பேன்

சுற்றி இருக்கும் நிசப்தங்களை

சுருட்டி முழுங்கி ஓய்கையில்

ஓய்ந்த பின் இருக்கும் சூழலை

எப்படி இரசிக்காமல் இருப்பேன்

விழுங்கிய நிசப்தங்களை ஒரு நொடியில்

வஞ்சனையின்றி தந்து செல்கையில்

தன் வண்ணத்தை வானிடமே

விட்டு வரும் வேளையில்

எப்படி கொண்டாடாமல் இருப்பேன்

தீண்டும் கணத்தில் அது

என் நிறம் கொள்கையில்

எத்தனை வடிவங்கள்

இந்த தண்ணீருக்கு மட்டும்

இருந்தும் தீண்டும் ஸ்பரிசத்தில்

நம்மை திமிரச் செய்வதென்னமோ

மழைநீர் மட்டும் தான்…!

- பிரியதரிஷினி செல்வநாயகம்

Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!