10/2/20

அன்பு தாயே (கவிதை போட்டி)

amma poem in tamil

கனம் தாங்கி என்னை கருவில் ஏந்தினாய்!

மரண வலியை சில மணித்துளியில் அனுபவித்தாய்!

இரத்தம் முறித்து எனக்கு  அமுதலித்தாய்!

சத்தமிட்டு அழும்போதெல்லாம் முத்தமிட்டு அனைத்தாய்!

சோர்ந்து விழும்போதெல்லாம் 

என்னோடு சேர்ந்து நின்றாய்!

பொய்யான இந்த  உலகில் 

நான் கண்ட உண்மை நீயே 

என் அன்பு தாயே...

 - மு.மங்கை

Tamil Kavithai Competition

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!