17/3/24

தாயே என்றும் உனக்காக நான்

மாதவிடாய் காலத்தில் கஷ்டப்பட்டாய்....

மாதவிடாய் நின்ற காலத்தில் மகிழ்ச்சியடைந்தாய்....

ஏனென்றால் நான் கருவுற்றிருப்பனோ என்ற எண்ணத்தில்.... 

நான் வளர வளர நீ என்னை நினைத்தாய்...

என்னுடைய சின்ன சின்ன அசைவுகளை உணர்ந்தாய்... 

அதை தந்தையிடம் கூறி அவரையும் மகிழ வைத்தாய்..... 

பத்து மாதங்கள் கழித்து என்னை ஈன்றெடுத்தாய்..... 

கருவறையில் இருந்து நான் வெளிவரும் பொழுது நீ அழுதாய்!!! 

நான் வந்த பிறகு என்னைப் பார்த்து மகிழ்ந்தாய்....!!! அன்னையே....

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்..

 அதனால் பிறக்கையில் அன்று அம்மாவுடன் நானும் அழுதேன்...!!! 

கல்லறையில் நீ உறங்கச் சொன்னால் கூட உறங்கு வேன்.. 

"அம்மா" நீ வந்து தாலாட்டு பாடினால் போதும்!!!! 

தாயே என்றும் உனக்காக நான்!!!! 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!