மறக்கமுடியவில்லை!
அழகாய் பேசிய வார்த்தையை விட
ஆறுதல் கூறிய வார்த்தைகளை
மறக்கமுடியவில்லை !
அழுத கண்ணீரின் வலிகளை விட
அன்பாய்ப்பார்த்த விழிகள் வழிகாட்டியதை
மறக்கமுடியவில்லை !
இருள் சூழ்ந்த மனதை மாற்ற
இனிய உறவாய் நான் இருப்பேன்
என்ற ஒற்றைச்சொல்லின் அர்த்தத்தை
மறக்கமுடியவில்லை !
கைவிரல் பிடித்து நடை காட்டிய
அம்மாவைவிட
தள்ளாடும் வரை பாதையாய்
பாவை உன்னில் பதிந்திருப்பேன்
என்பதனையை
மறக்கமுடியவில்லை !
உறவுகள் மத்தியில்
உரிமையோடு உறவு பேசி
உறவாடிய விதத்தை
மறக்கமுடியவில்லை !
காதலால் களவாடிய இதயத்தை
காட்சியாய் வேறொன்று கிடைத்ததும்
காயப்படுத்திய தடையத்தை
மறக்கமுடியவில்லை !
ஒளியாய் இருப்பேன் என்று
விழியைப்பறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்திய விதத்தை
மறக்கமுடியவில்லை !
இலவம் பஞ்சு இதயத்தை
இலகுவாக பேசி தீ மூட்டிய தனலை
மறக்கமுடியவில்லை !
ஏழன பார்வையில்
ஏகாந்த உரையில்
ஏறி மிதித்த சொற்களை
மறக்கமுடியவில்லை !
நான் பட்ட அவமானம்
உனது கிரீடமாய் தலையில் நிற்பதை
மறக்கமுடியவில்லை !
கண்ணீர்விட்ட தலையனையில்
சாட்சி சொல்ல துடிப்பதை
மறக்கமுடியவில்லை !
நீண்ட பாதையில்
நிற்கதியாய் நிறுத்தியதை
மறக்கமுடியவில்லை !
மறக்க நினைக்கும் ஓர் சொல்
உன் பெயர் மட்டுமே
மறையாமல் வாழ்வேன் இதயத்தில்
என்று நங்கூரம் பேசுவதை
மறக்கமுடியவில்லை !
மறுஜென்மம் எடுத்தாலும்
மனதில் மறையா உன் ஞாபக அலைகளை
மறக்கமுடியவில்லை !
மறையாமல் வாழ்கிறாய்
மூச்சு உள்ள வரை...
- லதா
படித்ததில் பிடித்தது
பதிலளிநீக்குNice
பதிலளிநீக்குVery nice
பதிலளிநீக்குThe real pain will be shown in this verse... No words to say any aplash... Nailed it and hands off the author.. Too fabulous.. Wow
பதிலளிநீக்கு