21/2/20

மூன்றெழுத்தில் முற்றும் மறந்தேன்

romance kavithai

வார்த்தைகள் சேர துடிக்கும் நொடி
விழி பேசத்தொடங்கிய தருணம்
மூன்றெழுத்து.

உன் இதயத்துடிப்பை உன் விழி வழி என்னுள் செலுத்திய தருணம் மூன்றெழுத்து.

உணர்வுகளின் எழுச்சியில் உடல் அசைவுற்று தன்னிலை மறந்த தருணம் மூன்றெழுத்து.

விடியலை மறந்து இரவின் மடியில்
விழி மூட மறுத்து, உன் நினைவில் உருகிய தருணம் மூன்றெழுத்து.

என்னை என்னுள் தொலைத்து உன்னில் தேடிய தருணம் மூன்றெழுத்து.

உன்னை மறக்க நினைத்த மௌனத்தின் தனிமையை
சத்தம் இட்டுக் கலைத்துச் சென்றது, என் மனதில் உன் முகம்பதித்த மூன்றெழுத்து.

பெண்மையின் உச்சம் தொட்ட
மறு நொடி வெட்கம் ததும்பிய தருணம் மூன்றெழுத்து.

வெறும் மூன்றெழுத்தில் என்னை முழுவதுமாய் அவன் உயிரில் கடத்த  எப்படி முடிந்தது காதலே?

- அனுஷாயினி

Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!