16/1/20

கன்னத்தில் விழும் குழி - (கவிதை போட்டி)

kanna kuzhi kavithai in tamil
சிரிக்கும் போது சிலருக்கு கன்னத்தில் விழும் குழியை பற்றி உருவக கவிதை.

எத்தனையோ முறை நான் இடறி விழுந்தும் உன் கன்னத்தில் ஆழவட்டம் அமைக்கிற அந்த குழியை ஏன் நீ மூடாமல் இருக்கிறாய்.....

அலை இல்லாத உன் கன்னத்தில் அது என்ன நீர் சுழி.....

ஈரமாகி விட்ட உன் கன்னத்தில் அது என்ன சங்கு சக்கரம்.....

ஆழ் கடல் தீவில் அது என்ன அமிழ்ந்து தோன்றும் அதிசய தீவு.....

இது என்ன இயற்கை உனக்கு மாத்திரமே காட்டுகின்ற சலுகையா.....

பூவரச மொட்டு உன் கன்னத்தில் எப்படி வந்தது.....

பாதரச பூவே நீ உள் வாங்கிய மனித பூச்சிகள் ஏராளம்.....

சதை சுழிப்பே நீ விஷம் தான். என் உயிர் நெருப்பை ஊதி வளர்க்கிற விஷம்.....

உன் தொப்புள் எப்படி சருக்காமல் கன்னம் வரைக்கும் ஏறி வந்தது.....

- அப்துல் ஹக்கீம் பாஷா

Tamil Kavithai Competition


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!