27/12/19

இயற்கை தந்தன இனிமை - (கவிதை போட்டி)

natural tamil kavithai image

அந்தி சாயும்  நேரம்பிறை நிலவும் சூரியனும் 
குளிர்ந்து தன் அழகை பிரதிபலிக்க
ஒய்யாரமாக வளர்ந்து  வானத்தை பார்த்து
விருட்சம் நின்றிருக்க...

இலைகளாய் உருவாக்கி சிட்டுக்கள் வீற்றிருக்க 
வித்தகம் தந்து செயற்கை விளக்கை கண்டு 
எகத்தாளம் செய்தது இயற்கை...

இனிமையான கானம் இசைத்து பட்சிகள்
தங்கள் இருப்பிடத்தை அணுக...

பாரெங்கும் பயணித்து கலைத்தது
மாலைப்பொழுததை தனதாக்கி.

மயக்கும் தனிமையை ரம்யமாக்கி சென்றது
இதுவல்லவோ வியக்கும் விந்தை உலகம்!

- உமா பாலகிருஷ்ணன்

Tamil Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!