2/12/19

காதலாய் - (கவிதை போட்டி)

love feeling kavithaigal
feeling kavithai image

காதல்

எழுதிய
எழுத்துக்களிலெல்லாம்
நீயே ஒளிந்திருக்கிறாய்
காதலாய்!

வாசம்

நீளும் மழையிரவில்
என் பிணி தீர்க்கும்
மாமருந்து
அவளின் வாசம்...

கூடு

ஓரே கிளியின் கூட்டுக்குள்
முகவரி எதற்கு என்றாய்
இருந்தாலும் என்றேன்
இன்று என் முகவரி தேடுகிறேன்.

புத்தன்

ஆசைகளை
மறைத்தும், ஒளித்தும்
வாழும் வேளையில்
நாமும் மாறிப்போகின்றோம்
வாழும் புத்தனாக.

S. அப்பாஜி

Tamil Kavithai Competition

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!