24/2/24

முகப்புத்தகத்தில்

 எப்போதும்போல் முகப்புத்தகத்தில் 

நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.

தள்ளத் தள்ள பதிவுகள் குவிந்து கொண்டே இருந்தன. 

 இருபாலர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன்

 கல்லூரிச் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தான்.

தள்ளிய விரல் உறைந்து நின்றது.

நினைவுகள் கல்லூரி காலத்திற்கு இழுத்துச் சென்றன. 

ஓர் இன்பச் சுற்றுலா நடந்திருக்கலாம் 

ஒரு குழு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்

வீட்டில் பிரேம் இட்டு மாட்டியிருக்கலாம்

அந்தக் கொடுப்பினையும் இல்லை.

இத்தனை வருடங்களாக ஒர் ஒளிப்படத்தை 

ஒளித்து வைத்து பார்க்க வேண்டியிருந்திருக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!