12/12/12

என் நட்புக்கு சமர்ப்பணம்...


friendship-kavithai-photo

என்னை விட்டு நீ செல்வதை காணும் பொழுது என் கண்கள் கலங்குகிறது...
என்னை நானே பல ஆயிரம் முறை கேட்டேன் எப்படி?
நான் உன்னை இழந்தேன் என...
என் கண்ணீர் வற்றி போனதன் காரணம் என்ன என்று...
முதல் முறை என்னிடம் ,பதில் ஏதும் இல்லை...
நான் என் நினைவுகளோடு ஒன்றிய பொழுது...
நீ என்னை பிரிந்து சென்றதை மட்டும் காண முடிகிறது...
உன்னை பிரிய மனம் இல்லை..
இருப்பினும் இதயத்தில் வலியுடன் உனக்காக பிரிகிறேன்...
என்னிடம் குழப்பம் எதுவும் இல்லை...
ஆனால் இதயம் அதிர்ச்சியால் கனத்து போனது..
என் உலகமே தலை கீழாக விழுந்தது போல் உணர்தேன்..
இதயம் கனத்து போனதால் வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது...
என் உயிர் முச்சை உபயோகித்து வெளி கொணர்தேன். அந்த சில வார்த்தைகளை
என்னை விட்டு பிரியாதே...என !....
என்றும் உன் நட்புடன்....

3 கருத்துகள்:

  1. நட்பை சிறப்பிக்கும் வரிகள் அழகு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி! மீண்டும் வருக !

    பதிலளிநீக்கு
  3. Tamil Kavithaikal, Tamil Poems, Festival Kavithaikal, Natural Kavithaikal. Find More Category Kavithaikal Pls Visit.http://www.valaitamil.com/literature_poem

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!